states

கர்நாடக முதல்வரின் சிலைக்கு விவசாயிகள் ரத்தாபிஷேகம்!

மாண்டியா, டிச.29- கர்நாடக மாநில விவசாயிகள், தங்களின் கைகளைக் கத்தியால் கீறி, முதல்வர் பசவராஜ் பொம்  மையின் சிலைக்கு ரத்தாபிஷேகம் செய்து போராட்டம் நடத்தியுள்ள னர். அமித்ஷா கர்நாடகம் வரும் நிலையில், விவசாயிகள் நடத்திய இந்தப் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில், கரும்பு  மற்றும் பாலுக்கான குறைந்தபட்ச  ஆதார விலையை உயர்த்தி வழங்க  வலியுறுத்தி, அங்குள்ள விவசாயி கள் போராட்டம் நடத்தி வரு கின்றனர். குறிப்பாக, மாண்டியா வில் விஸ்வேஸ்வரய்யா சிலை முன்பு நடைபெற்று வரும் விவ சாயிகள் போராட்டம் 50 நாட்க ளைக் கடந்து விட்டது. எனினும், பசவராஜ் பொம்மை தலைமை யிலான அம்மாநில பாஜக அரசு, விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டு கொள்ளவில்லை. கோரிக்  கைகளையும் நிறைவேற்ற வில்லை.

 இது விவசாயிகளை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கிய நிலை யில், புதனன்று 50-ஆவது நாள் போராட்டம் நடைபெற்றது. அப்  போது, விவசாயிகளுக்கு நல்ல  செய்தி தருவதாக உறுதியளித்த முதல்வர், எங்களை ஏமாற்றி விட்டார் என்று கூறிய விவசாயி கள் கத்தியால் தங்களின் கை களைக் கீறிக்கொண்டு, பாஜக  முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு  ரத்தாபிஷேகம் செய்தனர். இது  அந்தப் பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. இதை யடுத்து பாதுகாப்புக்கு நின்றிருந்த  போலீசார், கைகளைக் கீறிக் கொண்ட விவசாயிகள் 25 பேரை யும் கைது செய்ததுடன், தர்ணா பந்தலையும் அங்கிருந்து அகற்றி யுள்ளனர். இது விவசாயிகள் மத்தி யில் கடும் அதிருப்தியை ஏற் படுத்தியுள்ளது. “விவசாய விளைபொருட் களுக்கான குறைந்தபட்ச ஆதார  விலையை (MSP)அறிவியல் பூர்வ மாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களின் பல்  வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற அரசுக்கு அழுத்தம் கொடுப்  பதற்காகவே 50 நாட்களாக அமைதியான முறையில் தர்ணா நடத்துகிறோம். மைசூரு, மாண் டியா, ராய்ச்சூர், பெல்லாரி, பெல காவி, பாகல்கோட் ஆகிய பகுதி களில் நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், மாநில அரசு, காவல்துறையைப் பயன்  படுத்தி போராட்டத்தை சீர் குலைக்க முயற்சிக்கிறது’’ என்று  கர்நாடக மாநில விவசாயிகள் சங்க தலைவர் படகலபுரா நாகேந்திரா குற்றம் சாட்டியுள்ளார். “பொது நிகழ்ச்சியில் பங்கேற்  பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெள்ளிக் கிழமையன்று மாண்டியாவுக்கு வருகிறார். இதற்காகவே விவ சாயிகளை அப்புறப்படுத்தும் நட வடிக்கைகள் எடுக்கப்படுகின் றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.