states

ஆசியக் கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு சூதாட்டம் காரணமா?

புதுதில்லி, செப். 11 - “ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏற்பாட்டாளர்கள் யார்; அதில் நாம் ஏன் மோசமாக வீழ்த்தப்பட்டோம்; கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்றதா..?” எனவும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, கடந்த 2 வாரத்திற்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கியது. லீக் சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தி யாசத்தில் வீழ்த்திய இந்தியா, 2-வது லீக் போட்டியில் குட்டி அணியான ஹாங்காங்கிற்கு எதிராக தடுமாறி வெற்றி பெற்றது. சூப்பர் 4 சுற்றுக்கும் முன்னேறியது. ஆனால், கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி பாகிஸ்தானி டம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்தியா, செப்டம்பர் 6-ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான  போட்டியிலும் தோற்றுப் போனது. இதனால், இந்தியா ஆசிய  கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாமலேயே வெளியேறியது. இந்நிலையில் பாஜக முன்னாள் எம்.பி. சுப்பிரமணிய சாமி, டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏற்பாட்டாளர்கள் யார்?, அதில் நாம் ஏன் மோசமாக வீழ்த்தப்பட்டோம்? கிரிக்கெட் சூதாட்டமா? அப்பாவியாக கேட்கிறேன்.” என்று  குறிப்பிட்டு உள்ளார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருப்பவர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா. இவரே பிசிசிஐ செயலாளராகவும் இருக்கிறார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகளை இவர்தான் முன்னி ன்று செய்தார். இந்நிலையில், ஜெய் ஷா மீது ஏற்கெனவே பல்வேறு ஊழல் முறைகேட்டுப் புகார்கள் உள்ள  நிலையில், அவரது பெயரைக் குறிப்பிடாமல், சூதாட்டம் நடை பெற்றதா? என்று சுப்பிரமணியசாமி கேள்விஎழுப்பியுள்ளார்.

;