வெயில், மழை, குளிர் என பல இயற்கை தடங்கல்கள்; பொய் வழக்குகள்; கைதுகள்; நேரடி வன்முறைத் தாக்குதல்கள்; இழிவுபடுத்தும் அவதூறுப் பிரச்சாரங்கள்; படுகொலைகள்; உயிரிழப்புகள் என அனைத்து தடைக்கற்களையும் முறியடித்து போராடினர். சுதந்திர இந்தியாவில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் அறப்போராட்டம். எனது தேசத்தின் மகத்தான விவசாயிகளுக்கு செவ்வணக்கம். சம்யுக்த கிசான் மோர்ச்சா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை பிரதமர் மோடி உடனடியாக விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தைகளை நடத்தி நிறைவேற்ற வேண்டும்.