states

வில்-அம்பு சின்னம் முடக்கம்

புதுதில்லி, அக்.9- மகாராஷ்டிராவில் சிவசேனா வின் வில் அம்பு சின்னத்துக்கு ஏக்  நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே  உரிமை கோரி வரும் நிலையில்,  இந்தச் சின்னத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் சனிக்கிழ மையன்று முடக்கியது. இதை யடுத்து உதயசூரியன் உள்ளிட்ட  மூன்று சின்னங்களை உத்தவ் தாக் கரே பிரிவு சமர்ப்பித்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை பாஜகவுக்கு ஆதரவாக உடைத்து முதல்வர் ஏக்நாத்  ஷிண்டே தலைமையில் ஒரு அணியும், உத்தவ் தாக்கரே தலை மையில் ஒரு அணியும் செயல்  பட்டு வருகின்றன. தங்கள் அணி தான் உண்மையான சிவசேனா என்று அறிவிக்கும்படி, தேர்தல் ஆணையத்தில் இருதரப்பும் மனுக் கொடுத்துள்ளன. அதே போல், உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதில், யார் உண்மையான சிவசேனா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்வதில் தலையிட முடியாது என்று உச்ச  நீதிமன்றம் கூறி விட்டது. இந்த நிலையில், கட்சியின் பெரும் பான்மை நாடாளுமன்ற உறுப்பி னர்கள், சட்டமன்ற உறுப்பினர் கள், கட்சி நிர்வாகிகள் தனது  பக்கம் இருப்பதால், சிவசேனா வின் வில், அம்பு சின்னத்தை தனது  அணிக்கு ஒதுக்கும்படி தேர்தல்  ஆணையத்திடம் ஷிண்டே கோரி யுள்ளார். இதற்கான கடிதத்தை அதனிடம் அளித்தார். அதில், ‘அந்தேரி கிழக்கு சட்டமன்றத்  தொகுதிக்கு நவம்பர் 3-ஆம் தேதி  இடைத்தேர்தல்  நடக்கிறது. எனவே,  வில் அம்பு சின்னம் குறித்து விரை வாக முடிவு எடுத்து, அதை தங்  கள் அணிக்கு ஒதுக்க வேண்டும்,’ என்று கோரினார்.

இந்தக் கடிதத்துக்கு சனிக் கிழமை பிற்பகல் இரண்டு மணிக்  குள் பதில் அளிக்கும்படி உத்தவ் தாக்கரேவுக்கு தேர்தல் ஆணை யம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில்  உத்தவ் தாக்கரே  தனது பதிலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்  பினார். அதில், ‘ஏக்நாத் ஷிண்டே அணியினர் தாங்களாகவே சிவ சேனா கட்சியில் இருந்து விலகிச் சென்று விட்டனர். இதனால், கட்சி யின் வில் அம்பு சின்னத்துக்கு அவர்கள் உரிமை கோர முடி யாது’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், வில் அம்பு சின்னத்தை இருதரப்புக்கும் வழங்காமல், தேர்தல் ஆணை யம் சனிக்கிழமை இரவோடு இரவாக முடக்கியது. இதனால், இனி வரும் தேர்தல்களில் ஷிண்டே, உத்தவ் தாக்கரே இந்த சின் னத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது. சிவசேனா வேட்பாளருக்கு  காங்., என்சிபி ஆதரவு அந்தேரி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு மறைந்த சிவசேனா  ரமேஷ் லட்கே-வின் மனைவி  அவரது மனைவி ருஜுதா லட்கேவை வேட்பாளராக  சிவ சேனா அறிவித்துள்ளது. ருஜுதா  லட்கேவை காங்கிரஸ் மற்றும்  என்சிபி கட்சிகள் ஆதரிக்கின்றன.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் ஞாயிறன்று கூறியதாவது:  “தேர்தல் ஆணை யம் சேனா தேர்தல் சின்னத்தை  முடக்கியது. ஜனநாயகத்தை “முடக்க” செய்யும் ஒரு நடவ டிக்கை. “வில் மற்றும் அம்பு”  உத்தவ் தலைமையிலான உண் மையான சிவசேனாவுக்கு சொந்தமானது. பாஜக-வுக்கு  சேவகம் செய்யும் ஷிண்டேவுக்கு  அல்ல” என்றார். இதற்கிடையில்  இரு பிரிவின ரும் “சிவசேனா” என்ற பெயரை பயன்படுத்துகின்றன. எனவே மாற்று பெயரை வழங்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், ஞாயிறன்று உத்தவ் தாக்கரே தலைமையி லான சிவசேனா பிரிவு  திரிசூலம், டார்ச் (ஜோதி) மற்றும் ‘உதய  சூரியன்’ ஆகிய சின்னங்களின் ஒன்றை வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தி டம் சமர்ப்பித்துள்ளதாக நாடாளு மன்ற உறுப்பினர் அரவிந்த் சாவந்த் தெரிவித்தார். “வில் மற்றும் அம்பு சின்னத் தின் மீதான எங்கள் உரிமையை நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம். அந்தச் சின்னம் எங்க ளுடையது”  அதே நேரத்தில்  பாரதிய ஜனதா கட்சியின் உத்த ரவிற்கேற்ப தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் சாவந்த் குற்றம் சாட்டியுள்ளார்.