states

பாஜகவின் பி டீமாக இருக்கக் கூடாது காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை

பாஜகவின் பி டீமாக இருக்கக் கூடாது காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை

எதிர்க்கட்சியாக செயல்பட வேண் டும், பாஜகவின் பி டீமாக இருக் கக் கூடாது என காங்கிரஸ் கட்சியி னருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி வெளி யிட்ட வீடியோவில்,”கடந்த 30 ஆண்டுக ளாக குஜராத் மக்களின் எதிர்பார்ப்பு களை காங்கிரஸால் ஏன் நிறைவேற்ற முடியவில்லை? இதன் பதில் என்ன வென்றால், கட்சிக்குள் இருவகையான தலைவர்கள் இருக்கின்றனர். ஒன்று பொதுமக்களுடன் நின்று அவர்களு க்காகப் போராடுபவர்கள்; மற்றொன்று மக்களை மதிக்காமல் பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறவர்கள். கட்சி யின் இந்த இரு குழுக்களையும் பிரிப்பது தான் எனது வேலை. கட்சியில் இருபது முப்பது ஆண்டு கள் இருந்தாலும் பரவாயில்லை. அவர்க ளைக் கண்டிப்பாக வெளியேற்றுவோம். கட்சிக்குள் இருந்தவாறு பாஜகவுக்கு வேலை செய்தால், கண்டிப்பாக அந்தக் கட்சிக்கே அனுப்பப்படுவீர்கள். ஆனால் அந்தக் கட்சியில் உங்களை ஒரு பொ ருட்டாகக்கூட எடுத்துக் கொள்ள மாட்டார் கள். இங்குள்ளவர்களின் நரம்புகளில் காங்கிரஸ் ரத்தம்தான் இருக்க வேண்டும். காங்கிரஸை எதிர்க்கட்சியாகத்தான் குஜராத் மக்கள் விரும்புகின்றனர்; பாஜக வின் பி டீமாக அல்ல” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.