states

img

மணிப்பூரை துளைக்கும் பெல்லட் குண்டுகள்

புதுதில்லி, செப்.30- மணிப்பூரில் போராடும் மாண வர்கள் மீது துணை ராணுவப் படை யினர் காஷ்மீரில் பயன்படுத்திய பெல்  லட் குண்டுகளை பயன்படுத்தி துப்  பாக்கியால் சுட்டதில் இரண்டு பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக் கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந் துள்ளனர். கடந்த ஜூலை 6-ஆம் தேதி லுவாங்பி லிந்தோய்ங்கம்பி ஹிஜாம் (17)  என்ற மாணவியும், பிஜாம் ஹேமன்ஜித் சிங் (20) என்ற மாணவரும் காணாமல் போயினர். மெய்டெய் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள், 4 மாதங்களுக்குப் பிறகு, குக்கி பழங்குடிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பிணமாகக் கிடந்த புகைப்படங்கள் வெளியாகவே, மணிப்  பூர் மாநிலத்தில் மீண்டும் கலவரம்  வெடித்துள்ளது. தங்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியரின் படு கொலைக்கு நீதிகேட்டு, மெய்டெய் பிரி வைச் சேர்ந்த மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.  மறுபுறத்தில், மெய்டெய் மக்கள் அதிகம் வசிக்கும் பள்ளத்தாக்கு பகுதி களை விட்டுவிட்டு, குக்கி பழங்குடிகள் அதிகம் வசிக்கும் மலைப்பகுதிகளில் மட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) மணிப்பூர் அரசு நீட்டித்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து, குக்கி பழங்குடியினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.  இதனால் பல இடங்களில் வன் முறை வெடித்துள்ளது.  இந்நிலையில்தான், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பேரணி நடத்திய மாணவர்கள் மீது துணை ராணுவப்  படையினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ள னர். இதில் மாணவர்கள் பலத்த காயங்  கள் அடைந்துள்ளனர். குறிப்பாக, இம்பாலில் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவன் லைடான்பாம் கிஷன் சிங், கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். இந்த மாணவர் உடலில் சுமார் 90 பெல்லட் குண்டுகள் பாய்ந்துள்ளன. ஆர்ஏஎப் எனும் (Rapid Action Force)  அதிரடிப் படையினர்,

மிக அருகில் இருந்தபடி பெல்லட் குண்டுகளால் சுட்  டுள்ளனர்.  பேரணியில் வந்த மாணவர்கள் ஆயு தம் எதுவும் ஏந்தி வரவில்லை. இருந்  தும், நிராயுதபாணிகளான அவர்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுள்ளனர். இதனை குறிப்பிட்டு, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் சரோதனி கண்ணீர் விட்டுள்ளார். சிறுவனின் உடலிலிருந்து 60  குண்டுகளைத்தான் அகற்ற முடிந்தி ருக்கிறது. 30 குண்டுகள் இன்னமும் உட லில் இருப்பதாக மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். இதேபோன்று 17 வயதுடைய தாக்சம் லெமன்சன் என்கிற மற்றொரு சிறுவனும் பெல்லட் குண்டுகளால் காயம் அடைந்துள்ளார். இவருடைய முகத்தில் கண்ணின் அருகில் சுடப்பட்டி ருப்பதாக மருத்துவ அலுவலர்கள் தெரி வித்துள்ளனர்.  மணிப்பூர் போராட்டத்தில் பாது காப்புப் படையினர் பெல்லட் குண்டு களைப் பயன்படுத்தி இருப்பது இதுவே  முதன்முறையாகும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாமல் இருக்கவே  பெல்லட் குண்டுகளை பயன்படுத்துவ தாக அரசாங்கம், பாதுகாப்புப் படை களும் கூறி வருகின்றன. ஆனால், இந்த  பெல்லட் குண்டுகள் மிகமோசமா னவை. குண்டுகள் சில்லுச் சில்லாக சிதறி உடலை சல்லடையாகத் துளைக்  கக் கூடியவை.  ஜம்மு - காஷ்மீரில் போராடிய மக்  களை ஒடுக்குவதற்கு இந்தக் குண்டு களைத்தான் ராணுவம் பயன்படுத்தி யது. அதையே தற்போது மணிப்பூரி லும் பாதுகாப்புப் படை பயன்படுத்தத் துவங்கியிருக்கிறது.