சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டி வாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த செப்டம்பர் மாதத்தில் 196 டுவிட்டர் (எக்ஸ்) பதிவுகளை பதிவிட்டுள்ளார். அதிகபட்ச மாக ஜி-20 மாநாடு வெற்றி தொடர்பாக 35 டுவிட்டுக்களை பதிவிட்டுள்ள மோடி, 6 மாதங்க ளாக பற்றி எரியும் மணிப்பூர் பற்றியும், அனந்த்நாக் தீவிரவாத தாக்குதல், உஜ்ஜையினி பாலியல் பலாத் கார சம்பவம் குறித்து பற்றியும் டுவிட்டர் பக்கத்தில் வாய் திறக்கவில்லை. இந்த விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் மாதத்தில்
மோடியின் டுவிட்கள்
ஜி-20 மாநாடு வெற்றி - 35; மன் கி பாத் - 28; புதிய நாடாளுமன்றம் - 24; ஆசிய விளை யாட்டுகள் - 25; வரவிருக்கும் தேர்தல் - 21; “இந்தியா” கூட்டணி மீதான தாக்குதல் - 19; வாரணாசி கிரிக்கெட் மைதானம் - 18; வந்தே பாரத் ரயில் - 12; பிறந்த நாள்/பண்டிகை வாழ்த்துகள் - 11; தனது வாட்ஸ் அப் சேனல் - 4; தனது யுடியூப் சேனல் - 2.
பிரதமர் மோடி டுவிட் செய்த
நாட்டின் முக்கிய சம்பவங்கள்
மணிப்பூர் நெருக்கடி - 0; ஹரியானா வன்முறை -
0; அனந்த்நாக் தீவிரவாத தாக்குதல் - 0; உஜ்ஜ
யினி திகில் - 0.
“சிங்கம்” மற்றும் “விஸ்வகுரு” என்று பொது
வாக அழைக்கப்படும் நமது பாரத பிரதமர் இவர்தான்.
ஆதாரம் : டக்டர் பகிர் 2.0 (Ductar Fakir 2.0)
டுவிட்டர் கணக்கிலிருந்து...