states

img

பெண்களுக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம்

காத்மண்டு, பிப்.2- நேபாள அரசியலில்  அனைத்து மட்டங்களிலும் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த புதிய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. நேபாள அரசியல் சட்டத்தின்படி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும். அந்த எண்ணிக்கையை விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்வு செய்யப்படுவதன் மூலமாகவே நிரப்பி வருகிறார்கள். நேரடித் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பெண்  வேட்பாளர்களை நிறுத்த அனைத்துக்  கட்சிகளுமே தயங்கி வருகின்றன. தற்போது நடைபெற்ற தேர்தலிலும் இது எதிரொலித்தது. நாடாளுமன்றத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 412 வேட்பாளர்கள் போட்டி யிட்டனர். இதில் 225 பேர் மட்டுமே  பெண்களாவர். நேபாள கம்யூனிஸ்ட் (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி மட்டும்தான் எட்டு விழுக்காடு அளவுக்கு பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. மற்ற அனைத்துக் கட்சிகளுமே ஐந்து விழுக்காட்டி ற்கும் குறைவாகவே நிறுத்தியிருந் தார்கள். பெண் உறுப்பினர்கள் எண்ணிக் கையை உத்தரவாதப்படுத்த புதிய  முயற்சியைத் தேர்தல் ஆணையம் செய்யவுள்ளது. ஒவ்வொரு கட்சியும்,  நேரடித் தேர்தலிலும் மூன்றில் ஒருவர் பெண் வேட்பாளர்களாகவே நிறுத்த வேண்டும் என்று ஆலோசனையை முன்வைத்திருக்கிறது.