சென்னை, மார்ச் 21- 2023-2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், மக ளிர்க்கான உரிமை தொகை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாடு அரசின் சார்பில் சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2023-2024 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள படி மகளிர்க்கான உரிமை தொகை மாதம் ரூ.1,000 செப்டம்பர் மாதம் முதல் வழங்கப் படும் என்று அறிவித்திருப்பதை ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறது. அத்தொகை யை எந்தவித தொய்வும் இன்றி அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் அரசு வழங்கிட வேண்டும். அதேபோல் பெண் தொழில் முனைவோர் உரிய நேரத்தில் கடன்களைப் பெறவும், அவர்கள் தயாரித்த பொருட்களை சந்தைப் படுத்தவும், பெண் தொழில் முனைவோருக்கு புத்தொழில் இயக்கம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏழை, எளிய பெண்களுக்கான திருமண உதவித் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை வழங்கக் கோரி பெண்கள் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. எனவே மீண்டும் அத்திட்டத்தை செயல்படுத்திட வேண்டும்.
நிறுத்தப்பட்ட உதவித்தொகையை வழங்குக!
இந்த நிதிநிலை அறிக்கையில் புதிதாக விண்ணப்பிக்கப்பட்டுள்ள முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், விதவை கள், ஆதரவற்றோர் என ஒரு லட்சம் பேருக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தமிழ்நாட்டில் முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகைகளை பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு ஏற் கெனவே அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் இந்த உதவித்தொகையை நம்பி வாழும் சாதாரண ஏழை, எளிய மக்கள் பெரு மளவில் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உதவித்தொகை களை உடனடியாக வழங்கிட வேண்டும்.
நுண்நிதி நிறுவனங்களின் அடாவடி
தமிழ்நாட்டில் நுண்நிதி நிறுவனங் களின் அடாவடித்தனத்தால் பல்லாயிரக் கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள னர். அதிக வட்டி வசூல் செய்வது, தவணை தொகையை திருப்பி செலுத்த முடியாத பெண்களை மோசமாக நடத்துவது போன்ற நடவடிக்கைகளை நுண்நிதி நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. பெண்கள் சிறு சிறு தேவைகளுக்காக இத்தகைய நுண்நிதி நிறுவனங்களை நம்பி செல்ல வேண்டி உள்ளது. இதை பயன்படுத்தி நுண்நிதி நிறுவனங்கள் கடும் அடாவடித் தனங்களில் ஈடுபடுவதால், பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை க்கு தள்ளப்படுகிறார்கள். எனவே, தமிழ்நாடு அரசு பெண்களுக்கு சிறு, சிறு கடன்களை குறைந்த வட்டிக்கு வழங்கிட வேண்டும். தமிழ்நாட்டில் பெண்கள் மீதான வன் முறைகளை தடுத்து நிறுத்த, பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கண்டறிய, தமிழ்நாடு அரசால் உருவாக்கப் பட்டுள்ள தமிழ்நாடு மகளிர் ஆணை யத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கிட வேண்டும்.
போதைக்கு எதிராக...
மேலும் தமிழ்நாட்டில் சமீப காலமாக போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் மாண வர்கள் போதைக்கு இரையாகி வருவது, மிகுந்த அச்சமடைய செய்கிறது. ஒரு தலைமுறையையே சீரழிக்கும் இத்தகைய போதை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழ்நாடு அரசு போதைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கிட வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள படி டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து, குடி நோயாளி களுக்கு சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி, உரிய நிதிஒதுக்கீட்டை செய்திட வேண்டும். அதிகரித்து வரும் பெண்கள் - குழந்தை கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர் தலை மையிலான கண்காணிப்பு குழுக்களை அமைத்து செயல்படுத்திட நிதி ஒதுக்கிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.