states

img

சிபிஐ, அமலாக்கத்துறை ரெய்டு பின்னணியில் நிச்சயமாக பிரதமர் மோடி இருக்கமாட்டார்!

புதுதில்லி, செப். 21 - சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட விசார ணை முகமைகளை பாஜக தலைவர்கள்தான் சிலர் முறைகேடாக பயன்படுத்துவதாகவும், இதில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருக்கும் என்று தான் நம்பவில்லை என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல் வருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான பார்த்தா சாட்டர்ஜி, அனுப்ரதா மண்டல் ஆகியோர் சிபிஐ அதிகாரி களால் அண்மையில் ஊழல் வழக்குகளில் அடுத் தடுத்து கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே, திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோரும் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிபிஐ, அமலாக்கத் துறை  உள்ளிட்ட அமைப்புகள் மேற்கு வங்க மாநி லத்தில் எல்லை மீறி பயன்படுத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து அம்மாநில சட்டப்பே ரவையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் திங்களன்று தீர்மானம் கொண்டு வந்தது. 189 எம்எல்ஏ-க்கள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் 69 எம்எல்ஏ-க்கள் எதிராகவும் வாக்களித்தனர். முன்னதாக இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.

அப்போது, “ஒன்றிய பாஜக அரசு சர்வாதி காரப் போக்குடன் செயல்பட்டு வருகிறது” என்று  குற்றம்சாட்டி விட்டு, உடனேயே, “இந்த தீர்மானம் தனிப்பட்ட யாரையும் குறிப்பிட்டு நிறைவேற்றப்படவில்லை” என்று சுருதியைக் குறைத்துக் கொண்டார். மேலும், “ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளின் பாரபட்ச மான அணுகுமுறையை கண்டித்தே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது; மற்றபடி சிபிஐ,  அமலாக்கத் துறை தவறாக பயன்படுத்தப்படு வதன் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாக நான் கருதவில்லை” என்று ஜால்ஜாப்பில் ஈடுபட்டார்.

‘ஏன் பிரதமர் இருக்கமாட்டார்..?’ என்பதற்கு, ஏனெனில் “சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் பிரதமர் அலுவலகத்தின் கீழ்  வராது. அது, ஒன்றிய உள்துறை அமைச்சக த்தின் கட்டுப்பாட்டில் வரும். அதனால், இதன் பின்னணியில் பிரதமர் மோடி இருப்பதாக நினை க்கவில்லை” என்று, ஒன்றுமே தெரியாத அப்பாவி போல மம்தா கூறிக் கொண்டார். “சிபிஐ அமைப்பு பிரதமர் அலுவலகத் திற்கு அறிக்கைகளை முறையாக தாக்கல் செய்வ தில்லை. இந்த விஷயம் பலருக்கு தெரியாது” எனவும் மோடிக்கு மம்தா பரிந்து பேசினார். “ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள பாஜக  தலைவர்கள், தங்களது சுய நலத்திற்காக சதி செய்கின்றனர். ஒன்றிய அரசின் நடவடிக்கை களும் பாஜக-வினரின் விருப்பங்களும் ஒன்றாக கலப்பதை பிரதமர் நரேந்திர மோடி தடுத்து நிறுத்த வேண்டும்” என்றும் அன்பான முறையில் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார். ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் பாராட்டு இம்மாத துவக்கத்தில், மேற்கு வங்க  தலைமைச்  செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ்எஸ் அமைப்பையும் மம்தா  பானர்ஜி பாராட்டி பேசியிருந்தார். ‘ஆர் எஸ்எஸ்-சில் அனைவரும் மோசமானவர்கள் இல்லை. அந்த அளவுக்கு கெட்ட அமைப்பும் இல்லை. பாஜக செய்யும் அரசியலுக்கு ஆதரவு தெரி விக்காதவர்களும் அங்கு உள்ளனர்’ என்று மம்தா கூறினார். இதற்கு முன்னதாக, ‘2003- இல், ஆர்எஸ்எஸ் அமைப்பை ‘தேசபக்தர்கள்’ என்று மம்தாவும், பதிலுக்கு மம்தாவை ‘துர்கை’ என்று ஆர்எஸ்எஸ் அமைப்பும் பரஸ்பரம் பாராட்டிக் கொண்டதும் நினைவுகூரத் தக்கதாகும்.

;