ம.பி. மாநிலத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, 2 ஆண்டு களுக்கு முன்பு திடீரென கட்சியை உடைத்து பாஜகவில் இணைந் தார். அவரது ஆதரவு எம்எல்ஏ-க்களும் பாஜகவில் சேர்ந்த தால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அண் மையில் இதனை குறிப்பிட்டுப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், “சிந்தியா ஒரு துரோகி. அவரது குடும்பத் தினரும் நம்பிக்கை துரோகம் செய்ப வர்கள்தான்” என்று விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள சிந்தியா, “திக் விஜய் சிங் அளவுக்கு என்னால் தரம் தாழ்ந்து பேச முடியாது” என்று தெரிவித் துள்ளார்.