states

img

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

மும்பை, பிப்.6- கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92. கொரோனா  தொற்று தொடர்பான லேசான அறிகுறிகளுடன், தெற்கு மும்பை யின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ஜன.8-ஆம் தேதி லதா மங்கேஷ்கர் அனு மதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ஐசியூ வார்டில் வைத்து பராமரிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் வசதி பொருத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து 20 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல்நலம் தேறியது. இதனால் கடந்த வாரம் வெண்டி லேட்டர் சிகிச்சை நிறுத்தப்பட்டது. ஆனால், சனிக்கிழமை அவரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளது என ப்ரீச் கேண்டி மருத்துவ மனை நிர்வாகம் தகவல் வெளியிட்டது. இந்நிலையில் ஞாயிறன்று சிகிச்சை  பலனின்றி லதா மங்கேஷ்கர் காலமானார். அவரது மறைவை லதாவின் சகோதரி உஷா மங்கேஷ்கர் உறுதி செய்தார். பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய சினிமாவின் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவராகத் திகழ்ந்த லதா மங்கேஷ்கர், 1942-இல் தனது 13-ஆவது  வயதில் இசை வாழ்க்கையைத் தொடங்கி யவர். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் 30,000 பாடல்களுக்கு மேல் பாடியு மிருக்கிறார். இசை வாழ்க்கையில், பல்வேறு மறக்கமுடியாத கானங்களுக்கு தனது குரலால் உயிர்கொடுத்தவர் என்பதால், இந்தியாவின் ‘மெலடி குயின்’ என்று ரசிகர்களால் போற்றப்படுகிறார். பத்ம பூஷன், பத்ம விபூஷண் மற்றும் தாதா சாஹேப் பால்கே விருது மற்றும் பல கவுரவங்களை லதா மங்கேஷ்கர் பெற்றுள்ளார்.

தமிழ் திரையுலகில மங்கேஷ்கர்

தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளி யான சத்யா திரைப்படத்தில் கவிஞர் வாலி இயற்றிய “வளையோசை கல கல  கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது” என்ற பாடலை  மறைந்த கவிஞர் எஸ்.பி.பாலசுப்ரமணி யத்துடன் இணைந்து லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார். நடிகர் பிரபு நடிப்பில் 1987ஆம் ஆண்டு  வெளியான ‘ஆனந்த்’ என்ற படத்தில் ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடலைப் பாடினார். பாடகர் மனோவுடன் இணைந்து ‘எங்கிருந்தோ அழைக்கும்’ என்ற பாடலை ‘என் ஜீவன் பாடுது’ என்ற படத்தில் பாடியுள்ளார்.

சீத்தாராம் யெச்சூரி இரங்கல்

லதா மங்கேஷ்கர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி, “பாவம், ராகம், தாளம்’ - பாரதம் - என்றென்றும் நிலைத் திருக்கும். அவளுடைய குரலை எப்போதும் நம் இதயங்களில் சுமந்து செல்வோம் எனத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் மங்கேஷ் கர் மறைவிற்கு இரங்கல்தெரிவித்துள்ள னர். மங்கேஷ்கர் மறைவையடுத்து நாடு முழுவதும் இரண்டு நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவரது இறுதி நிகழ்ச்சி அரசு மரியாதையுடன்  நடைபெறும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.