states

img

ஆப்பிள் “சிவப்பது” ஏன்?

இமாச்சலப் பிரதேச ஆப்பிள் விவசாயிகள் வீதிகளில் இறங்கி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டி ருக்கிறார்கள். 30 ஆண்டுகளு க்கு முன்பு இது போன்று பெரும் போராட்டம் நடத்தி உள்ளார் கள். இப்போது மீண்டும் அவர்க ளின் கோபம் வீதிகளில் வெளிப் படுகிறது.  1970, 80களில் ஆப்பிள் விளைச்சலுக்கு அரசு நிறைய உதவிகளை செய்தது. பண் ணைகள் அமைப்பு, பெருமள வில் விவசாயிகளுக்கு செடி கள், அட்டைப் பெட்டிகளுக்கு போக்குவரத்து மானியம், கருவி களுக்கு சலுகை, தலித் மற்றும் ஏழைகளுக்கு ஆப்பிள் தோட்டம் வைக்க சிறப்பு நிதி உதவி ஆகியன அவற்றில் அடங்கும். நிலச் சீர்திருத்தங்க ளும் நடைபெற்றன. உழுப வர்க்கே நிலம் சொந்தம் என்ற நிலை உருவானது. விவசா யிகள் அல்லாதவர்களுக்கு நிலம் கை மாறுவதை இமாச லப் பிரதேச சட்டங்கள் தடை செய்தன. குறைந்த பட்ச ஆதார விலைகள், விவசாயிகளின் போராட்டங்கள் காரணமாக உயர்ந்தன. ஆனால் 1991 க்கு பிந்தைய மாற்றங்கள் - அரசு ஆதரவு வாபஸ் உள்ளிட்டு - விவசாயத்தை கட்டுப்படி இல்லாத ஒன்றாக மாற்றின.  இன்றைய நெருக்கடிக்கு இரண்டு முக்கிய காரணங்கள்.

ஒன்று, உற்பத்திச் செலவு. கடந்த 10 ஆண்டுகளில் இடு பொருள், உரம், பூச்சிக் கொல்லி மருந்து, பூஞ்சைக் கொல்லிகள் ஆகியவற்றின் விலைகள் 300 சதவீதம் உயர்ந் துள்ளன. ஆப்பிள் அட்டைப் பெட்டிகள், ட்ரே,   பார்சல் செலவுகள் எதிர்பாராத உயர்வை சந்தித்துள்ளன. 10 ஆண்டுகளில் அட்டைப் பெட்டி கள் ரூ. 30 லிருந்து ரூ. 130 க்கு  உயர்ந்துள்ளது. சந்தைக்கு கொண்டு செல்கிற விலைக ளும் அதிகரித்துள்ளன.  இரண்டாவதும் உடனடிக் கோபத்தை முடுக்கி விட்டது மான பிரச்சனை ஜிஎஸ்டி உயர்வு. 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக... மூன்று விவசாய சட்டங்களுக்கு சொன்ன அதே காரணம் இதற்கும் சொல்லப்படுகிறது. இடைத் தரகர்களை ஒழிக்கப் போகிறோம் என்பது. உண்மை யில் ஆப்பிள் விவசாயிகளை பெரும் நிறுவனங்களுக்கு விற்குமாறு நிர்ப்பந்தம் செய்வதுதான் நோக்கம்.  அவர்கள் எல்லா ஆப்பிள் களையும் வாங்க மாட்டார்கள். உயர் தர ஆப்பிள்களை மட்டுமே. அவை மொத்த ஆப்பிள் உற் பத்தியில் 20% லிருந்து 30% வரை தான் இருக்கும். மீத ஆப்பிள்க ளின் நிலைமை என்ன என்றால் பதில் இல்லை. 

இவற்றிலும் பெரு நிறுவ னங்கள் கொள்முதல் செய்யப்  போவது 5 முதல் 7 சதவீதம் தான். இவர்கள் சந்தைக்குள் வந்தவுடன் விலையை சரித்து விடுவார்கள். ஜம்மு - காஷ் மீரில் குறைந்த பட்ச விலைக்கு சட்டம் உள்ளது. ஆனால் அப்படி சட்டம் இமாச்சலப் பிரதே சத்தில் இல்லை. அரசுக்கு அப்படியொரு சட்டம் கொண்டு வரும் யோசனையும் இல்லை.  விவசாயிகள் C2 + 50% கேட்கி றார்கள். அதாவது (உற்பத்தி செலவு + குடும்ப உழைப்பு + முதலீடு மீதான வட்டி) + அதன் மீது 50% என்று அர்த்தம்.  அரசோ பெரும் நிறுவனங்க ளின் அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளது. சந்தையை அத னால் கட்டுப்படுத்த இயல வில்லை. குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்க முடிய வில்லை. இதனால் ரூ.5500 கோடி சந்தை கொண்ட ஆப்பிள் விவசாயம் பாதிக்கப் படுகிறது. சிறு, நடுத்தர விவ சாயிகள் தூக்கி எறியப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே இமாச்சலப் பிரதே சத்தில் ஆப்பிள் விவசாயிகள் வீதிக்கு வந்திருப்பதன் காரணம்.

நன்றி: தி இந்து (ஆங்கிலம்) 12.09.2022,  தமிழில் சுருக்கம்: க.சுவாமிநாதன்