அகமதாபாத் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குஜராத் மாநில 24ஆவது மாநாடு ராஜ்கோட் மாவட்டம் உப்லேடா வின் தோழர் சீத்தாராம் யெச்சூரி நகரில் ஜனவரி 11ஆம் தேதி நடை பெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 10 மாவட்டங் களில் இருந்து 192 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 56 பேர் பெண்கள் ஆவர். இளை ஞர்களும் அதிகளவில் பங்கேற்றனர். மகான்பாய் ஜிவானி கொடி யேற்றி வைத்தார். தியாகி களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய பின் தொடக்க நிகழ்வுக்கு முன்னாள் மாநிலச் செயலாளர் பிரஜிபாய் பாம்பி தலைமை வகித்தார். வரவேற்புக் குழு தலைவர் கிரண்பென் கலா வாடியா அனைவரையும் வர வேற்றார். தொடர்ந்து அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் டாக்டர் அசோக் தாவ்லே மாநாட்டை தொடங்கி வைத்து, சர்வதேச அளவில் ஏகாதிபத்தியம் மற்றும் சியோனிசத்தின் ஆபத்து மற்றும் தேசிய அளவில் நியோ-பாசிச ஆர்எஸ்எஸ்-பாஜக தாக்குதலின் ஆபத்து குறித்தும், அனைத்து மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமையின் அவசியத்தையும் விளக்கினார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சொந்த பலத்தையும், செல்வாக்கையும் விரைவாக அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும் டாக்டர் அசோக் தாவ்லே எடுத்துரைத்தார். இரண்டு பகுதிகளாக மாநாட்டு அறிக்கை வைக்கப்பட்டு விவாதம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஹிதேந்திரா ஐ.பட் அரசியல் பகுதியையும், மத்தியக் குழு உறுப்பினர் அருண் மேத்தா அமைப்புப் பகுதியையும் வைத்தனர். 24 பிரதிநிதிகள் முதல் விவாதத்தில் பங்கேற்றனர். 17 பிரதிநிதிகள் இரண்டாம் பகுதி விவாதத்தில் பேசினர். குறிப்பாக முக்கிய பிரச்சனைகள் குறித்த 12 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தொகுப்புரைக் குப் பின் அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
“கம்யூனிஸ்ட் சித்தாந்தம்” நூல்
மாநாட்டின் முதல் நாளன்று உப்லேட்டாவில் உள்ள டவுன்ஹாலில் விவசாயிகள் பிரச்ச னைகளும் அதற்கான தீர்வும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் டாக்டர் அசோக் தாவ்லே, முரளிதரன், தயாபாய் கஜேரா ஆகியோர் உரையாற்றி னர். தொடர்ந்து முன்னாள் மாநிலச் செயலாளர் சுபோத் மேத்தா குஜ ராத்தி மொழியில் எழுதிய “கம்யூ னிஸ்ட் சித்தாந்தம்” என்ற நூலின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டது. உதய் ஜோஷி தகுதி ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். மாநாட்டில் 30 பேர் கொண்ட புதிய மாநிலக் குழுவும், நிரந்தர அழைப்பாளர்களும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 9 பேர் மாநிலச் செயற்குழு உறுப்பினர் களாக தேர்வு செய்யப்பட்டனர். மீண்டும் மாநிலச் செயலாளராக ஹிதேந்திரா ஐ.பட் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் மதுரை நகரில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாட்டிற்கு 6 பிரதிநிதிகள், 2 மாற்று பிரதிநிதிகள், 2 பார்வையாளர்கள் என 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மத்தியக் குழு உறுப்பினர் முரளிதரன் நிறைவுரையாற்றினார். நிறைவுரை யில் அவர் அமைப்பு தொடர்பான முக்கிய விஷயங்களை வலி யுறுத்தினார்.