கோவிட் பாதிப்புக்கு பிறகு உலகளாவிய சுகாதார கட்டமைப்புகள் மிகக் கடு மையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. உதாரணத்திற்கு உலக அளவில் காசநோய் தடுப்புத் திட்டங்களுக்கு செலவழிக்கப்பட்ட தொகை 2019 இல் 6 பில்லியன் டாலர் என்று இருந்தது, 2021 இல் 5.4 பில்லியன் டாலர் என 10 சதவீதம் வெட்டப்பட்டது. இதே காலத்தில் உலக அளவில் காசநோயால் பலியான வர்களின் எண்ணிக்கை 14 லட்சம் என்பதிலிருந்து 16 லட்சமாக அதிகரித்தது.
இதே போல மலேரியா தொடர்பான நோய்களால் இதே காலத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5.58 லட்சத்திலிருந்து 6.27 லட்சமாக - 12 சதவீதம் அதிக ரித்தது. இவை, இரண்டு உதாரணங்கள் மட்டுமே! உலக சுகாதார நிலைமையையும், கட்டமைப்பை யும் மேம்படுத்துவதற்கான சிறந்த மருந்து எது என்று, மேற்கண்ட நிலைமைகளை யெல்லாம் சுட்டிக்காட்டி, மக்கள் மத்தியில் நிலவும் பொருளாதார மற்றும் வரு மான ஏற்றத்தாழ்வை குறைப்பது தான் என உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
திருவாளர் மோடி அவர்களது அரசு இதை கவ னிக்கிறதா என்பது தான் நமது கேள்வி. ஐக்கிய நாடுகள் சபையின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் 2030, அனைத்து வயது மக்களின் ஆரோக்கியமான வாழ்வை உறுதிப்படுத்துவது என்பதை முதன்மை இலக்காக கொண்டிருக்கிறது. ஆனால், ஆளும் அரசாங்கங்கள் அதை நிறைவேற்றும் திட்டங்களை கொண்டுள்ளனவா என்ற கேள்வி எழுகிறது. “சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் நிதி ஒதுக்கீடு மிகக் கடுமையாக வெட்டப்படும் இந்த கால கட்டத்தில், சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நல்வாழ்வுக் கான செலவினங்களையும் வெட்டுவது பொருத்தமா னது அல்ல; அதை ஒரு நாட்டின் எதிர்கால பொருளா தார மற்றும் சுகாதார வளர்ச்சிக்கான முதலீடா கத்தான் கருத வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. மீண்டும் கூறுகிறோம் மோடி இதை கவனிக்க வேண்டும். பெரும் கார்ப்பரேட்டுகள், மகா கோடீஸ்வ ரர்கள் மீது வரி விதியுங்கள்!