நாமக்கல், அக்.19- விசைத்தறி தொழிலாளர்களுக்கு உடனடியாக போனஸ் வழங்க வேண்டும் என சிஐடியு தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் காவேரி ஆர்.எஸ். சிஐடியு சங்க அலுவலகத்தில், தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பி.முத்துசாமி தலை மை வகித்தார். இதில், மாநில பொதுச் செயலாளர் சந்திரன், மாநிலப் பொரு ளாளர் எம்.அசோகன் உட்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், விசைத்தறி தொழிலில் பணிபுரியும் ஆண், பெண், பிரிவு தொழிலாளர்களுக்கு இன்னும் போனஸ் வழங்கப்படவில்லை. கடந்தாண்டை காட்டிலும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்க ளை கருத்தில் கொண்டு உடனடியாக கூடுதல் போனஸ் வழங்கவேண்டும். தமிழக அரசும், விசைத்தறி தொழிலா ளர்கள் போனஸ் விவகாரத்தில் தலையிட்டு, பிரச்சனையை சுமூகமாக தீர்க்க உதவ வேண்டும். தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டணம், ஏற்கனவே பாதிப்புக்கு உள் ளாகியுள்ள விசைத்தறி தொழிலாளர் களையும், விசைத்தறி தொழிலையும் மேலும் பாதிப்படைய செய்யும் வகை யில் இருப்பதால் மின்சார கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். விலையில்லா பொங்கல் வேட்டி, சேலை தயாரிக்கும் நெசவா ளர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூல மாக வரவேண்டிய தொகை ரூ.50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை நிலுவையில் இருப்பதால், நெச வாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள் ளாகி வருகின்றனர். எனவே கூட்டுறவு சங்கங்கள் உடனடியாக வேட்டி, சேலைக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை நெசவாளர்களுக்கு தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.