states

img

‘ஜனநாயகம் எனும் நாகம் பாஜகவை விழுங்கும்’

தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து போடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட வீரபாண்டி பழனிசெட்டிபட்டி, போடி கோட்டூர், சீலையம்பட்டி பகுதிகளில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஐ.லியோனி மேற்கொண்ட பிரச்சாரத்தில்...

“லேகியம் விற்பவர் போல் பேசி  தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற  துடிக்கிறார் நரேந்திர மோடி. மூன்று முறை முதல்வராகவும், மூன்று முறை  போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஆகவும் இருந்த ஓபிஎஸ் இன்று இராமநாதபுரம் சென்று பலாப்பழம் விற்றுக்  கொண்டிருக்கிறார்.  மோடி என்ற மழைநீர் பட்டதும் கத்தித் திரியும் தவளை தான் அண்ணாமலை. வரு கின்ற ஜூன் 4-ஆம் தேதி ஜனநாயகம் என்ற நாகம் அண்ணாமலையை விழுங்கி விடும்.  பதவிக்காக நான்கு நாற்காலிக்கு இடையே மலைப்பாம்பு போல் நெளிந்து சென்று போலியாக கண்ணீர் விட்டு அழுது  நடித்து துரோகம் செய்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. யாருக்கும் நன்றி இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை முதல்வராக ஆக்குவதற்கு ஆதரவு தந்த பன்னீர் செல்  வத்திற்கும் துரோகம் செய்தவர். அஇஅதி முக என்ற கட்சியில் திமுகவை எடுத்து விட்டால் ‘அகில இந்திய அடிமைகள்’ என இவர்களுக்கு சரியாக பொருந்தும்’’.