நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் திங்களன்று தொடங்கியது. கூட்டத்தொடர் துவங்கியவுடன் சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் குறிப்பு களை வாசித்தார். அதன்பிறகு கேள்வி நேரம் தொடங்குவதாக அறிவித்தார். அப்பொழுது மழைக்கால கூட்டத்தொடரில் தன்னை அவதூறாக பேசிய பாஜக எம்பி ரமேஷ் பிதூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலி கழுத்தில் பதாகைகளுடன் தனி ஆளாக போராட்டம் நடத் தினார். இதனை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிர கலாத் ஜோஷி சபாநாயகரிடம் சுட்டிக்காட்ட, பதாகைகளுடன் சபைக்கு வருவது நாடாளு மன்ற விதிகளுக்கு எதிரானது என்றும், பதாகைகளை அகற் றுமாறும் டேனிஷ் அலிக்கு உத்தரவிட்டார்.