states

img

இந்துத்துவா மதவெறியை முறியடித்திட மதச்சார்பற்ற சக்திகளை அணிதிரட்டுக!

புதுதில்லி, செப்.17- இந்துத்துவா மதவெறியை முறியடித்திட, மதச்சார்பற்ற சக்திகளை அணிதிரட்ட வேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு அறைகூவல் விடுத்துள் ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழுக் கூட்டம் செப்டம்பர் 15-16 தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது. அத னைத் தொடர்ந்து வெள்ளியன்று மாலை 4 மணி யளவில் பத்திரிகையாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அரசி யல் தலைமைக்குழு அறிக்கையை வெளியிட்டுப் பேசினார். தலைமைக் குழுவின் அறிக்கை வரு மாறு:

மதச்சார்பற்ற சக்திகளை அணிதிரட்டுக!

கட்சியின் சுயமான பலத்தை வளர்த்திட வும், இடதுசாரிக் கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்திடவும், இடது மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை ஒருமுகப்படுத்திட வும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தீர்மா னித்திருக்கிறது. இந்திய அரசமைப்புச்சட்டத் தைப் பாதுகாத்திடவும், ஜனநாயகத்தைப் பாது காத்திடவும், மக்களின் ஜனநாயக உரிமைகள்  மற்றும் குடிமை உரிமைகளைப் பாதுகாத்திட வும், இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜன நாயகக் குணாம்சத்தைப் பாதுகாத்திடவும் அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயகக் கட்சிகளை யும் ஒருங்கிணைத்திட முயற்சிகளை மேற் கொள்ளும்.

சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரம்

நாட்டின் பொருளாதார நிலைமையை மிகைப்படுத்தி மோடி அரசாங்கம் என்னதான் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருந்தபோதிலும், உண்மையில் இந்தியப் பொருளாதாரம் சரிந்து கொண்டிருப்பது தொடர்கிறது. சர்வதேச ரேட்டிங் ஏஜென்சியான  ஃபிட்ச் (International rating agency Fitch), 2023ஆம் நிதியாண்டுக் கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8  விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாகக் குறைந்தி ருக்கிறது என்று கணித்திருக்கிறது. அதேபோன்றே இந்தியாவின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 2020,  2021 மற்றும் 2022 ஆண்டுகளில் உண்மையான  பண மதிப்பீட்டில் வெறும் 0.8 விழுக்காடே உயர்ந்திருப்பதாக உலக வங்கி வெளியிட்டுள்ள தரவு காட்டுகிறது.  

உணவுப் பொருட்கள் விலை உயர்வு

இந்திய ரிசர்வ் வங்கியின் 6 விழுக்காடு உச்ச வரம்பையும் தாண்டி, உணவுப் பொருள்களின்  விலைஉயர்வுகளால் பணவீக்கம் பாய்ச்சல் வேகத் தில் தொடர்ந்து எட்டாவது மாதமாக உயர்ந்திருக்கிறது. சில்லரைப் பணவீக்கமும் ஆகஸ்ட்டில் 7 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. உணவுப் பொருள்களின் விலைகள் 7.62 விழுக்காட்டைக் கடந்திருக்கிறது. கிராமப்புற இந்தியாவின் நிலைமை பணவீக்கம் 7.15 விழுக்காட்டிற்குச் சென்றிருப்பதால் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி (industrial output growth)யும்,  ஜூனில் 12.7 விழுக்காடாக இருந்த நிலையிலி ருந்து, ஜூலையில் 2.4 விழுக்காடாக வீழ்ச்சி யடைந்திருக்கிறது. அதேபோன்றே நுகர்வுப் பொருள்கள் உற்பத்தியும் ஜூனிலிருந்ததைவிட 3 விழுக்காடு குறைந்திருக்கிறது. இவற்றின் விளைவாக வேலையில்லாத் திண்டாட்டமும் நாட்டில் மிகவும் பரிதாபகரமான நிலைக்குச் சென்றிருக்கிறது. தேசிய குற்றப் பதிவு நிலையம், 2021 ஆம் ஆண்டில் தற்  கொலை செய்து கொண்டவர்களில் அதிகமான  எண்ணிக்கையில் உள்ளவர்கள் நாள்கூலித் தொழிலாளர்கள் என்று ஏற்கனவே கூறியிருக்கி றது.  

செப்டம்பர் பிரச்சாரம்

செப்டம்பர் 14 முதல் 24 வரையிலும் மக்களின் வாழ்வாதாரங்களைக் கடுமையாகப் பாதித் துள்ள சுமைகளுக்கு எதிராகவும், ஜனநாயகம், ஜனநாயக உரிமைகள், மதச்சார்பின்மை மற்  றும் இந்திய அரசமைப்புச்சட்டத்தைப் பாது காத்திடவும், நாடு முழுவதும் பல்வேறு வடி வங்களில் பிரச்சாரங்களை நடத்திடவும் மாநில அளவில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணி களுடன் நிறைவடைய வேண்டும் என்றும் கட்சி யின் மத்தியக்குழு அறைகூவல் விடுத்திருக்கி றது. பணக்காரர்களுக்கு வரிச் சலுகைகள் அளிப்பதையும், கூட்டுக்களவாணி முதலாளி கள் வங்கிகளில் வாங்கியுள்ளக் கடன்களைத் தள்ளுபடி செய்வதையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அவற்றுக்குப் பதி லாக இவ்வளங்களை,  வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதத்தில் பொது முதலீடுகளுக் குப் பயன்படுத்திட வேண்டும் என்றும் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.

பெண்களுக்கு எதிரான  வன்முறை வெறியாட்டங்கள்

2021ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான  வன்முறை வெறியாட்டங்கள் 15 விழுக்காடு அள விற்கு மிகப்பெரிய அளவில் அதிகரித்திருப்ப தையும், இதில் ஈடுபட்ட கயவர்களுக்கு எதிரான தண்டனைகள் என்பது மிகவும் அற்ப அளவி லேயே இருப்பதையும் அரசியல் தலைமைக் குழு கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது. சமீபத் தில் உத்தரப்பிரதேசத்தில் இரு தலித் சிறுமிகள் மிகவும்  பயங்கரமான முறையில் பாலியல் கும்  பல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளது, அம்மாநிலத்தில் பெண்  களுக்கு எதிரான பாதுகாப்பு சீர்குலைந்தி ருப்பதன் பிரதிபலிப்பாகும்.  

ஹைதராபாத்: பாஜக மீண்டும் வரலாற்றைத் திரிக்கிறது

1948 செப்டம்பர் 17 அன்று ஹைதராபாத் நிஜாம் இந்திய ஒன்றியத்திடம் சரணடைந்தது. அதுவரையிலும் தனியாக இருந்த நாடு, இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. இந்த தினத்தை ‘விடுதலை’ (‘liberation’) பெற்ற தினமாக அனு சரித்திட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்/பாஜக பிரகடனம் செய்திருக்கிறது. அதன் நோக்கம் இவ்வாறு ஹைதராபாத் நிஜாம் முஸ்லீம் ஆட்சி யாளர்களிடமிருந்து ‘விடுதலை’ செய்யப்பட்ட தினம் என்று கூறி மதவெறித் தீயை விசிறி விட வேண்டும் என்பதேயாகும். இவ்வாறு வர லாற்றை வேண்டுமென்றே திரித்து, மாற்றி எழு திக் கொண்டிருக்கிறது. 1946இல் மிகவும் கொடூரமான நிலப்பிர புத்துவ ஒடுக்குமுறைக்கு எதிராக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ்  வீரஞ்செறிந்த ஆயுதப் போராட்டம் நடைபெற் றது. இது நிஜாமுடைய எதேச்சதிகார ஆட்சி யைக் கணிசமான அளவிற்கு நலிவடையச் செய்தது. 1948 செப்டம்பர் 13 அன்று மேற்கொள்  ளப்பட்ட போலீஸ் நடவடிக்கை, நிஜாம் ஆட்சி யாளர்களைச் சரணடையச் செய்வதற்கான கடைசி துருப்பாகப் பயன்படுத்தப்பட்டது. அத னைத் தொடர்ந்து அது 1948 செப்டம்பர் 17 அன்று சரணடைந்தது.

தடையிலிருந்த ஆர்எஸ்எஸ்

உண்மை வரலாறு இவ்வாறிருக்கையில் அதனை ‘விடுதலை’ பெற்ற தினமாக ஆர்எஸ்எஸ் இப்போது உரிமை கொண்டாடுவது கேலிக்குரி யதாகும்.  மகாத்மா காந்தி படுகொலை செய்யப் பட்டதைத் தொடர்ந்து சர்தார் பட்டேல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்தார். இந்தத் தடை 1948 பிப்ரவரி 4இலிருந்து ஜூலை  11 வரை நீடித்தது. நிஜாமைச் சரணடைய வைப்ப தில் ஏதாவது பங்கினை பாஜக கூறினால் அது கேலிக்குரிய ஒன்றாகும்.

வீரத் தெலுங்கானா விவசாயிகள் போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த  தினத்தை ஆயுதப் போராட்டத்தின் வீரஞ்செறிந்த வரலாற்றை நினைவுகூரும் தினமாக அனுசரித்தி டும், நிலப்பிரபுத்துவ பண்ணையடிமைத்தனத்தி லிருந்து விடுதலைக்காகப் போராடிய லட்சக்க ணக்கான விவசாயிகளின் விடுதலைப் போராட் டத்தையும் அதில் பலியான எண்ணற்ற தியாகி களின் வரலாற்றையும், நினைவு கூர்ந்திடும். இத்துடன் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் விவசாயி களின் எழுச்சிகள் நடைபெற்றன. ஆயுதந்தாங்  கிய தெலுங்கானா விவசாயிகள் போராட்டமா னது, சுதந்திர இந்தியாவில் நிலச்சீர்திருத்தங் கள் பிரச்சனையை ஒரு மையமான பிரச்சனை யாகக் கொண்டு வந்தது. அடுத்த மத்தியக் குழுக் கூட்டம்,  அக்டோபர் 29-31 தேதிகளில் தில்லியில் நடைபெறும்.

(தமிழில்: ச.வீரமணி)  

 

;