states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா

மகாராஷ்டிராவில் வாக்காளர் எண்ணிக்கை 9.54 கோடி. ஆனால் வாக்களித்தவர் எண்ணிக்கை 9.70 கோடி. வாக்களித்தவர்களின் காணொலி பதிவுகளை கேட்டதற்கு, தேர்தல் ஆணையம், பதிவுகளை கொடுக்க முடியாது என விதிகளை மாற்றி விட்டது. இந்த நாட்டில் இன்னும் நேர்மையாக தேர்தல் நடக்கிறது என எவரேனும் நம்ப முடியுமா? 

மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி

ஹோமியோ சத்து பானத்தை “சர்பத் ஜிஹாத்” என ராம்தேவ் கூறியதாக தொடரப்பட்டுள்ள வழக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. வெறுப்புப் பேச்சுக்கு நிகரான வகுப்புவாதப் பிளவை உருவாக்கும் பிரச்சனையாக இருப்பதால் முளையிலேயே கிள்ளியெறிய கடுமையான நடவடிக்கை தேவை.

உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கபில் சிபல்

இந்தியாவில் நாடாளுமன்றமும் மேலானது அல்ல. அரசும் மேலானது அல்ல. அரசியல் சாசனமே மேலானது. அரசியல் சாசனப் பிரிவுகளை விளக்கும் பணி உச்சநீதிமன்றத்துடையது. இப்படித்தான் சட்டத்தை இந்திய  நாடு இதுவரை புரிந்து வைத்திருக்கிறது.

திரிணாமுல் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா

நாட்டு மக்களுக்காக தான் அரசியல் சாசனம் என துணை ஜனாதிபதி சொன்னது தவறு. நீதித்துறை, அரசு மற்றும் அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான அதிகார சமநிலை சரியான வகையில் இருப்பதை பார்த்துக் கொள்வதுதான் அரசியல் சாசனத்தின் வேலை. கல்வியறிவு குறைந்தவர்களை உச்ச அதிகாரத்துக்கு கொண்டு சென்றால் இப்படித்தான் பேசுவார்கள்.