states

img

சமாஜ்வாதியில் இணைந்த காங்கிரஸ் வேட்பாளர்!

உ.பி. மாநிலம், முர்தாபாத் மாவட்டம், அம்ரோஹா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சலீம்கான் என்பவர், வெள்ளியன்று அக் கட்சியிலிருந்து விலகி, ராம்பூரில் நடந்த சமாஜ் வாதி கட்சி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அகிலேஷ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார். அண்மையில் சர்தாவால் தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் யவர் ரோஷனும் தேர்தலுக்கு முதல்நாள் சமாஜ்வாதியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.