states

img

ரயில் நிலைய கழிப்பறைக்கும் 12 சதவிகித ஜிஎஸ்டி வசூலித்த மோடி அரசு!

புதுதில்லி, செப்.5- தில்லி ஆக்ரா கண்டோன்மெண்ட் ரயில் நிலைய கழிப்பறையைப் பயன்படுத்திய பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகள் 2 பேரிடம் 12  சதவிகித ஜிஎஸ்டியுடன் ரூ.224 கட்டணம் வசூ லிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ்காரர்கள் 2 பேர் சுற்றுலாவாக இந்தியா வந்துள்ளனர். இவர்கள் தில்லி யிலிருந்து கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஆக்ரா கண்டோன்மெண்ட் ரயில்நிலை யத்துக்கு சென்றுள்ளனர். அங்கு சுற்றுலா வழி காட்டி அவர்களை வரவேற்றுள்ளார். இதனிடையே, சுற்றுலா பயணிகள் 2 பேரும் கழிவறை செல்ல விரும்பியுள்ளனர். அதன்படி ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கழிப்பறையை 5 நிமிடம் பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில்தான், இவர்கள் 5 நிமிடம்  கழிப்பறையைப் பயன்படுத்தியதற்காக, 12 சத விகித ஜிஎஸ்டி வரியைச் சேர்த்து இருவரிட மும் 224 ரூபாயை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலாக் கழகம் (Indian Railway Catering and Tourism Corporation - IRCTC) கட்டணமாக வசூலித்துள்ளது. இதுதொடர்பாக சமூக வலைத் தளங்களில் செய்திகள் பரவின. ரயில் நிலையங்களில் கழிப்பறையை பயன்படுத்தினால் ஜிஎஸ்டி-யுடன் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்று பலரும் அதிர்ச்சி வெளியிட்டனர். பலர் தங்களின் கண்டனங்களையும் தெரிவித்தனர். இதையடுத்து, பிரிட்டிஷ் பயணிகளிடம் 224  ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பாக ஐஆர்சிடிசி நிர்வாகம் விளக்கம் அளித்துள் ளது.

அதில் “ரயில் நிலையங்களின் காத்திருப்பு  அறைகளில் கழிப்பறைகளை பயன்படுத்து வதற்கு தனியாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி தவறானது. மாறாக ரயில்  நிலையங்களில் எக்ஸிகியூட்டிவ் ஓய்வறை களை ஐஆர்சிடிசி நிர்வகித்து வருகிறது. இதனை பயன்படுத்துவதற்கு ஜிஎஸ்டியுடன் சேர்ந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிரிட்டிஷ் பயணிகள் இருவரும் ஆக்ரா கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் எக்ஸிகியூட்டிவ் லவுஞ்ச் கழிவறை யை பயன்படுத்தினர். சிறுநீர் கழிக்க கழிப்பறை யைப் பயன்படுத்தியதற்காக ஒருவரிடம் ரூ.100 என 2 பேரிடம் மொத்தம் 200 ரூபாயும், அதற்கு 12 சதவிகித ஜிஎஸ்டி என்ற வகையில் 24 ரூபாய் சேர்த்து மொத்தம் 224 வசூலிக்கப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டுள்ளது. “5 நிமிடம் கழிப்பறையைப் பயன்படுத்தி யதற்கு ரூ.224 கட்டணமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், “இதில் எந்த விதிமீறலும் இல்லை. எக்ஸிகியூட்டிவ் லவுஞ்சை பயன்படுத்து வதற்கு ஒரு நபருக்கு 2 மணிநேரத்துக்கான நுழைவுக் கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு 12 சதவிகித ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இதன்மூலம் பய ணிக்கு குளிரூட்டப்பட்ட அறை வசதி, தொலைக் காட்சி, சாய்வு இருக்கை, இலவச தண்ணீர், இலவச வைபை, டீ, காபி, கழிப்பறை வசதி கள் கிடைக்கும். இதில் சில வசதிகளை பயணி கள் பயன்படுத்தாமல் இருந்தாலும் கூட அதே கட்டணம் தான் வசூலிக்கப்படும்’’ என்றும் ஐஆர்சிடிசி குறிப்பிட்டுள்ளது. எனினும் கழிப்பறை பயன்பாட்டுக்கும் 12 சதவிகித ஜிஎஸ்டி என்பதை ஏற்க முடிய வில்லை என்று பலரும் சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

;