states

img

40,000 பெண்களுக்கு இலவச டிக்கெட், உணவு: உலகக்கோப்பை மூலம் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தது பாஜக

13-வது சீசன் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வியாழனன்று தொடங்கும் நிலையில், தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின்  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டத்தை பார்க்க 40,000 பெண்களுக்கு உணவுடன் கூடிய இலவச டிக்கெட் வழங்க இருப்பதாக பாஜக ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அறிவித்தது போலவே போட்டி நடைபெறும் அகமதாபாத் மாநகராட்சி பகுதியின் 48 வார்டுகளிலிருந்து 40,000 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் மற்றும் தேனீருக்கு இரண்டு டோக்கன்கள், சிற்றுண்டிக்கு ஒரு டோக்கன், உணவு பாக்கெட்டுகளுக்கு ஒரு டோக்கன் என விநியோகித்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பிரச்சாரமாக எடுத்துக்கொள்ளும் என தகவல் வெளியாகிய நிலையில், எதிர்பார்த்தது போலவே 40,000 பெண்களுக்கு இலவச டிக்கெட், உணவு என பிரச்சாரத்தை துவங்கியுள்ளது பாஜக.