பாஜக-ஜேடியு மோதல்?
பாஜக அமைச்சர் ராஜினாமா
பாஜக-ஜேடியு கூட்டணி ஆளும் பீகார் மாநில அமைச்சரவையில் பாஜக மூத்த தலைவர் திலீப் ஜெய்ஸ்வாலுக்கு வரு வாய் மற்றும் நில சீர்திருத்த துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை அன்று திலீப் ஜெய்ஸ்வால் தனது அமைச்சர் பத வியை ராஜினாமா செய்வதாக திடீ ரென அறிவித்தார்.”ஒரு நபர், ஒரு பதவி” என்ற தனது கட்சியின் கொள்கைக்கு இணங்க அமைச்சர் பதவியை ராஜி னாமா செய்ததாக திலீப் ஜெய்ஸ்வால் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் பாஜக - ஜேடியு இடையேயான தொகுதி பங்கீடு மோதல் தீவிரமடைந்துள்ளதால் திலீப் ஜெய்ஸ்வால் ராஜினாமா செய்து ள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பீகாரில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தற்போதே பாஜக - ஜேடியு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா சுரங்க விபத்து 8 பேரும் உயிரிழப்பா?
\தெலுங்கானா மாநிலம் நாகர் னூல் மாவட்டத்தின் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாயில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதை சனிக்கிழமை காலை (பிப்,. 22) இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுரங்கத்திற்குள் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 8 புலம் பெயர் தொழிலாளிகள் சிக்கிக்கொண்டனர். சுரங்கத்துக்குள் 14 கி.மீ., தொலைவில் விபத்து ஏற்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம், கடற்படை, எலிவளை சுரங்க தொழிலாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 4 நாள்களில் இல்லாத வகையில் புதனன்று மீட்புப் பணியில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெலுங்கானா காவல்துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகை யில், “சுரங்கத்தில் இடிபாடு ஏற்பட்டுள்ள பகுதியை மீட்புக் குழு கண்டறிந்துள்ளது. தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள், எலிவளை சுரங்க தொழி லாளர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட குழு சுரங்கத்தில் இறுதிவரை சென்று திரும்பியுள்ளது. சுரங்கத்தின் கடைசி 50 மீட்டர் முழுவதும் சேறும், இடிபாடு களும் உள்ளது. ஆனால் இடிபாடுகளில் யாரையும் கண்டறிய முடியவில்லை என மீட்புக் குழு கூறியுள்ளது” என அவர் கூறினார். இதனால் சுரங்கத்தில் சிக்கியுள்ள 8 பேரும் உயிரிழந்து விட்டனரா என்ற அச்சம் எழுந்துள்ளது.