மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வாக்காளர் களுக்கு பணம் விநியோகித்த போது ரூ.5 கோடி பணத்துடன் பாஜக நிர்வாகி வினோத் தாவ்டே பிடிபட்டார். விரார் கிழக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜன் நாயக்கிற்கு ரூ.5 கோடியை தர வந்த போது வினோத் தாவ்டே சிக்கினார். வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கச் சென்ற வினோத் தாவ்டேவை தடுத்து பகுஜன் விகாஸ் அகாதி கட்சியினர் வாக்குவாதம் செய்த னர். எனினும் பாஜக நிர்வாகி வினோத் தாவ்டே கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.