states

img

“யமுனை நதிநீர் விவகாரத்தில் பாஜக - ஆம் ஆத்மி நாடகம்”

தில்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சா ரத்தின் போது ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்,”தில்லி மக்கள் பயன்படுத்தும் முக்கிய குடிநீர் ஆதாரமான யமுனை ஆற்றில் ஹரியா னா பாஜக அரசு விஷம் கலந்துள்ளது” எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். கெஜ்ரிவாலின் இந்த குற்றச்சாட்டு தில்லியில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த விவகாரம் தொடர்பாக கெஜ்ரி வால் கூறிய குற்றச்சாட்டுகளுக்கான உண்மையான சான்றுகளை சமர்ப்பிக் கும்படி தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. 14 பக்கங்கள் கொண்ட பதிலை தேர்தல் ஆணையத்துக்கு கெஜ்ரிவால் அளித்துள்ளார். இந்நிலையில், தில்லியைப் பாதிக் கும் முக்கிய பிரச்சனைகளைப் புறக்க ணிக்க யமுனை நதிநீர் தொடர்பான விவகாரத்தில் பாஜகவும், ஆம் ஆத்மியும் நாடகம் நடத்துவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி கடுமையாக விமர்சித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,”தில்லிக்கு தண்ணீர் வழங்கும் யமுனை நதியில் ஹரியானா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாக கெஜ்ரி வால் கூறியுள்ளார். இதுபோன்ற நாட கங்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, சாலைகளின் சிலை, சுத்தமான குடிநீர், நகரத்தில் நீர் தேங்குதல் போன்ற வைகளை எவ்வாறு கையாளுவது போன்ற உண்மையான பிரச்சனைகளில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.  முன்னாள் தில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தின் பதவிக்காலத்திற்குப் பின்பு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏன் நிறுவப்படவில்லை. நீர் சுத்திக ரிப்பு உள்கட்டமைப்பு ஏன் உருவாக் கப்படவில்லை என்பதை பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் விளக்க வேண்டும்” என அவர் கூறினார்.