பாக்பத், ஜன.5- காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 110 நாட்க ளுக்கும் மேலாக இந்திய ஒற்றுமைப் பய ணத்தை மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனது பயணத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், பாக்பத் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்களை மிரட்டுவதுதான் பாஜக-வின் கொள்கை என்று சாடியுள்ளார். “கடந்த காலங்களில் ராணுவத்தில் சேர்ப வர்கள் 15 ஆண்டு காலம் பணியாற்று வார்கள். பிறகு ஓய்வூதியம் பெறுவார்கள். ஆனால், தற்போது ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அக்னி பாதை திட்டத்தில் சேர்ப வர்களுக்கு எந்த ஓய்வூதியமும் இல்லை. வெறும் 4 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு அவர்கள் வெளியேற வேண்டும். அதன் பிறகு அவர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்க வேண்டும். இதுதான் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள அக்னி பாதை திட்டம். இந்த அக்னி பாதை திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடிய போது, போராட் டத்தில் கலந்து கொண்ட மாதிரியான புகைப் படத்தில் இருந்தால், உங்களுக்கு அரசு வேலை கிடைக்காது என்று பாஜக கூறியது. பாஜகவின் இந்த கொள்கை காரணமாக இளைஞர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.
இளைஞர்கள், விவசாயிகள், தொழிலா ளர்களை பயமுறுத்துவதுதான் பாஜகவின் கொள்கையாக இருக்கிறது’’ என்று பேசி யுள்ளார். மேலும், தான் டி-சர்ட் அணிவது சர்ச்சை ஆக்கப்படுவது குறித்தும் ராகுல் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். “இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது நான் டி-சர்ட் அணிந்து செல்வது சர்ச்சை ஆக்கப்படுகிறது. ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் இந்த பனிக் காலத்திலும் கிழிந்த ஆடையுடன் இருக்கி றார்கள். அத்தகைய குழந்தைகளில் பலர் இந்த யாத்திரையிலும் என்னோடு பங்கேற்றி ருக்கிறார்கள். ஆனால், கடும் குளிரில் அதற் கேற்ற ஆடை இல்லாமல் அவர்கள் இருப்பது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பு வதில்லை. நான் டி-சர்ட் அணிவது அல்ல; ஏழைக் குழந்தைகள் இந்த கடும் குளிரில் கதகதப்பான ஆடை அணிய வாய்ப்பில்லா மல் இருப்பதுதான் உண்மையான பிரச் சனை. ஆனால், ஊடகங்கள் ஏனோ அது குறித்துப் பேசுவதில்லை. மக்களிடம் பண வீக்கம் குறித்து கூறுவதை விட்டுவிட்டு, 4 சிறுத்தைகள் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அந்த சிறுத்தைகள் காட்டில் சுற்றித் திரிவதாகவும் ஊடகங்கள் செய்தியில் கூறுகின்றன. இது வேதனை அளிக்கிறது” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.