states

img

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் வார்த்தை விளையாட்டு பாஜக தலைமைக்கு ‘அலோடாக்ஸாஃபோபியா’

புதுதில்லி, டிச.16-  பாஜக தலைமைக்கு ‘அலோ டாக்ஸாஃபோபியா’ பீடித்துள் ளதாக காங்கிரஸ் மூத்த தலை வரும், அக்கட்சியின் எம்.பி. யுமான சசிதரூர் விமர்சித்துள்ளார். சசிதரூர் ஆங்கிலப் புலமை மிக்கவர். வளர்ந்தது மற்றும் பட்டப்படிப்பை முடித்தது இந்தி யாவில்தான் என்றாலும், அவர் பிறந்தது பிரிட்டன் தலைநகர் லண்டன் ஆகும். இதன்காரண மாக அவரின் ஆங்கில வார்த் தைப் பயன்பாடுகளும், அவரின் ஆங்கில உச்சரிப்பும் பலராலும் ரசிக்கத்தக்கதாக இருந்து வரு கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் நீண்ட தாடி வளர்ப்பை, ‘போகோ னோடிராபி’ என்ற அரிய ஆங்கில வார்த்தையுடன் குறிப்பிட்டு அவர் வெளியிட்ட டுவீட் பலரையும், ஆங்கில அகராதியைத் தேட வைத்தது.  தற்போது, பாஜகவை விமர் சிப்பதற்கு, ‘அலோடாக்ஸாஃ போபியா’ (Allodoxaphobia) என்ற வார்த்தையை சசிதரூர் பயன்படுத்தியுள்ளார். இதற்கு அர்த்தம் கருத்து களை பகுத்தறிவதற்கான பயம் என்பதாகும். இந்த வார்த்தையை எப்படி பயன்படுத்துவது என் பதை எடுத்துக்காட்டுடன் விளக்குவதாக குறிப்பிட்டிருக் கும் அவர், உத்தரப் பிரதேச மக்கள் மீது ‘உபா’ வழக்குகளை யும், ‘தேசத் துரோக’ வழக்கு களையும் அம்மாநில பாஜக அரசு போடுவதற்கு, கருத்து களைப் பார்த்து பயப்படுவது தான் காரணம் என்று தெரிவித் துள்ளார்.

;