states

img

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஓணம் வண்ணமயமானது கேரளா

திருவனந்தபுரம், செப். 7 பெருந்தொற்றால் முடங்கிய இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு  ஓணம் கொண்டாட்டங்கள் வண்ணமய மாக துவக்கப்பட்டன. திருவனந்தபுரம் நிஷாகந்தி கலையரங்கத்தில் உற்சாக மாக திரண்டிருந்த பார்வையாளர்களை நேரில் பார்த்து கொடியசைத்து விழாவை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். இந்த ஓணம் வெள்ளம் மற்றும் கோவிட் நாட்களுக்குப் பிறகு கொண்டா டப்படும் ஒரு சந்தர்ப்பம் என்று முதல்வர் கூறினார். 2018இல் பெரும் வெள்ள த்தை சந்திக்க வேண்டியிருந்தது. 2019 இல் பருவமழை நெருக்கடி கடுமையாக இருந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகள், கோவிட்டால் மோசமடைந்தது. கோவிட் பயம் முற்றிலும் நீங்கவில்லை என்றா லும், கொண்டாட்டத்திற்கான சூழ்நிலை தயாராக உள்ளது. பருவநிலை மாற்றம் கவலையை ஏற்படுத்தினாலும், ஓணம் பண்டிகை கொண்டாடும் சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்றும், அனை வருக்கும் ஓணம் பண்டிகை நல்வாழ்த்து க்கள் என்றும் முதல்வர் தெரிவித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் பி.ஏ. முஹம்மது ரியாஸ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திரைப்பட நட்சத்தி ரங்கள் துல்கர் சல்மான் மற்றும் அபர்ணா பாலமுரளி கலந்து கொண்ட னர். இருவருக்கும் முதல்வர் பரிசுகளை வழங்கினார். அமைச்சர்கள் வி.சிவன் குட்டி, அந்தோணி ராஜு, ஜி.ஆர்.அனில், எம்.பி.க்கள் சசிதரூர், ஏ.ஏ. ரஹீம், எம்.எல்.ஏ.க்கள் கடகம்பள்ளி சுரேந்திரன், ஐ.பி.சதீஷ், வி.கே.பிரசாந்த், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் டி.சுரேஷ்குமார் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டத்தில்  அத்தப்பூ கோலமிட்டு ...

குமரி மாவட்டத்திலும் மலையாளம் மொழி பேசக்கூடிய மக்களும் அதை  சார்ந்தவர்களும் திருவோண பண்டிகை யை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.திருவோண பண்டிகைக்கு பத்து தினங்களுக்கு முன்னதாக ஒவ்வொரு நாளும் அத்தப் பூ கோலங்கள் போட்டு  பத்தாவது நாள்திருவோண பண்டிகை யாக கொண்டாடப்படுகிறது.  விளவங்கோடு, கல்குளம் தாலுகா வில் பெருவாரியான கல்வி நிறுவனங் கள் அரசு, அலுவலகங்கள் போன்றவை களில் திருவோண பண்டிகைக்கான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.அரு மனையில் உள்ள மழலையர் பள்ளி யில் திருவோண பண்டிகை கொண்டா டப்பட்டது.அருமனை பேரூராட்சியில் அலுவலகத்தில் தலைவர் வி.எம். லெதிகாமேரி தலைமையில் ஓணவிழா நடைபெற்றது. பாகோடு ஆலம்பாறை தனியார் பள்ளியில் பாகோடு பேரூராட்சி தலைவர் ஆர். ஜெயராஜ் முன்னிலையில் ஓண விழா நடைபெற்றது.