states

img

அதானியின் அபரிமித வளர்ச்சி!

‘ஹுருன் இந்தியா’ அமைப்பு வெளியிட்டிருக்கும் 2022ஆம் ஆண்டுக்கான இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில், முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் கௌதம் அதானி. உலக அளவிலும் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். ‘பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் அதானியின் சொத்துக்கள் மளமளவென அதிகரித்துவிட்டன’ என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. 2013 வரை பெரும் வளர்ச்சி காணாதிருந்த அதானியின் சொத்து மதிப்பு, 2014ஆம் ஆண்டு 152 சதவிகிதம் வளர்ச்சி பெற்றது.

இந்தியப் பணக்காரர்கள் பட்டியல் - 2022

(ரூபாய் மதிப்பு கோடிகளில்)

கௌதம் அதானி
மொத்த சொத்து மதிப்பு 10,94,400
தினசரி வருமானம் : 1612

முகேஷ் அம்பானி
மொத்த சொத்து மதிப்பு 7,94,700
தினசரி வருமானம் : 210

சைரஸ் பூனாவாலா
மொத்த சொத்து மதிப்பு 2,05,400
தினசரி வருமானம் : 114 
ஷிவ் நாடார்
மொத்த சொத்து மதிப்பு 1,85,800
தினசரி வருமானம் : 139

ராதாகிஷன் தமானி
மொத்த சொத்து மதிப்பு 1,75,100
தினசரி வருமானம் : 57

வினோத் சாந்திலால் அதானி
மொத்த சொத்து மதிப்பு  1,69,000
தினசரி வருமானம் : 102

எஸ்.பி.ஹிந்துஜா
மொத்த சொத்து மதிப்பு  1,65,000
தினசரி வருமானம் 151

எல்.என்.மிட்டல்
மொத்த சொத்து மதிப்பு 1,51,800
தினசரி வருமானம் : 62

திலிப் சங்வி
மொத்த சொத்து மதிப்பு   1,33,500
தினசரி வருமானம் : 40

உதய் கோடக்
மொத்த சொத்து மதிப்பு 1,19,400
தினசரி வருமானம் : 9

(ஷிவ் நாடார், ஹிந்துஜா, மிட்டல் ஆகிய மூவரின் நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்குவதால்,  தினசரி வருமானம் மைனஸில் செல்கிறது)

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் கோடியாக இருந்த அதானி குழுமத்தின் மொத்த கடன் மதிப்பு நடப்பாண்டில் 2.2 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.

நன்றி : ஜுனியர் விகடன், அக். 2,2022