சிம்லா, நவ.12- இமாசல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல், அமைதியாக நடந்து முடிந் துள்ளது. காலை 8 மணிக்குத் துவங்கி மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடை பெற்ற நிலையில், 65.92 சதவிகித வாக்குகள் பதிவாகின. 68 தொகுதிகளைக் கொண்ட இமாசல பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி அக்டோபர் 17 துவங்கி அக்டோபர் 25 வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. 27-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை யும், 29-ஆம் தேதி வேட்புமனு வாப ஸூம் நடைபெற்றது. இறுதியாக பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சுயேட்சைகள் என மொத்தம் 412 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். பாஜக வேட்பாளர்களுக்கு ஆதர வாக பிரதமர் மோடி துவங்கி அமித்ஷா, யோகி ஆதித்யநாத் உள் ளிட்ட தலைவர்களும், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்த பிரச்சாரம் கடந்த வியா ழக்கிழமையுடன் முடிவுக்கு வந்த நிலையில், சனிக்கிழமையன்று (நவம்பர் 12) வாக்குப் பதிவு நடை பெற்றது. மாநிலத்தில் மொத்தம் 55.92 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், இவர்களுக் காக 7 ஆயிரத்து 884 வாக்குச் சாவடி கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை முதலே மக்கள் அமைதி யாகவும், மிகுந்த ஆர்வத்துடனும் வாக்களித்தனர். மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்த நிலை யில், மாநிலம் முழுவதும் 65.92 சத விகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாக்குகள், குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண் ணிக்கையோடு சேர்த்து டிசம்பர் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறி விக்கப்பட உள்ளன. இமாசல பிரதேச மாநிலத்தில், 5 ஆண்டுக்கு ஒரு முறை பாஜக, காங்கிரஸ் என மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. தற்போது ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுவதால், இந்தமுறை தங்களுக்கே வெற்றி என காங்கிரஸ் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. அதற்கேற்ப கருத்துக் கணிப்புகளும்கூட போட்டி கடுமை யாக இருப்பதாகவே தெரிவித்துள் ளன. கடந்த 2017 சட்டமன்றத் தேர்த லில், மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பாஜக 44, காங்கிரஸ் 21, சுயேட்சை கள் 2, சிபிஎம் 1 என வெற்றி பெற்றனர். பாஜக 48.8 சதவிகிதம், காங்கிரஸ் 41.7 சதவிகிதம், சுயேட்சைகள் 6.3 சத விகிதம், சிபிஎம் 1.5 சதவிகிதம், பகு ஜன் சமாஜ் 0.5 சதவிகிதம், நோட்டா 0.9 சதவிதம் என வாக்குகள் கிடைத் திருந்தன.