states

விமானப்படை மூலம் 630 பேர் இந்தியா வந்தனர்

புதுதில்லி,மார்ச் 4- இந்திய விமானப்படை யின் மூன்று சி-17 விமா னங்கள் மூலமாக 630 பேர் உக்ரைனிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளதாக இந்திய  விமானப்படை தெரிவித்துள் ளது. உக்ரைனில் தங்கியிரு ந்த இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது. இந்தியர்களை மீட்கும் பணியான ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மூன்று சி-17 விமானங்கள்  630 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு ருமேனியா, ஹங்கேரியில் உள்ள வழியாக வந்தடைந்தது. கடந்த 3 நாட்களில் ஒவ்வொரு விமானத்திலும் 200 இந்தியர்கள் என ஏழு விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். உக்ரைனிலிருந்து 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர்  மீனாட்சி லேகியி தெரிவித்துள்ளார்.