ஜார்ஜ்டவுன், மே, 23- கயானா நாட்டில் பள்ளி விடுதி தீப்பிடித்து எரிந்ததில் 20 மாணவர்கள் உயிரிழந்தனர். தென்அமெரிக்க நாடான கயானாவின் மஹ்டியா பகு தியில் உள்ள மேல்நிலை பள்ளிக்குச் சொந்தமான மாணவர் விடுதி உள்ளது. நள்ளிரவு நேரத்தில் இவ்விடு தியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நன்றாக உறங்கி கொண்டிருந்த மாணவர்கள் புகை மண்டலத்தால் மூச்சு திணறி என்ன நடக்கிறது என் பது அறிய முடியாமல் அலறி அடித்து அங்கும் இங்கும் ஓடி னர். இந்த தீ விபத்தில் மாண வர்கள் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயத்து டன் மீட்கப்பட்ட 6 மாணவர் கள் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரி ழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந் துள்ளது. லேசான தீக்கா யங்களுடன் 20-க்கும் மேற் பட்ட மாணவர்களை தீய ணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.