states

img

சென்னையில் காலமான வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் தலைவர் அஞ்சலி

சென்னையில் காலமான வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.சுவாமிநாதன், வே.ராஜசேகரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பசுமைப் புரட்சியின் தந்தை; வேளாண் விஞ்ஞானி  எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்!

சென்னை, செப். 28 - இந்தியாவின் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தை என  அழைக்கப்படுபவருமான எம்.எஸ். சுவாமி நாதன், வயதுமூப்பு காரணமாக வியாழனன்று காலை 11.20 மணியளவில் சென்னை தேனாம் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 98. அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட நாட்டின் முக்கியத் தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், கல்வியாளர்கள், குறிப்பாக வேளாண்துறை சார்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  “நமது தேசத்தின் வரலாற்றில் மிக நெருக்கடி யான காலகட்டத்தில், விவசாயத்தில் அவர்  செய்த திருப்புமுனையான பணி மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது. நமது தேசத்திற்கு உணவு பாது காப்பை உறுதி செய்தது” என்று பிரதமர் மோடி  இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.  “எம்.எஸ். சுவாமிநாதனின் இழப்பு அறி வியல் துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடு செய்ய  இயலாத பேரிழப்பாகும். மிகப்பெரும் ஆளுமை யை இழந்து தவிக்கும் அறிவியல் உலகின ருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த  இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  சிபிஎம் அரசியல் தலைமைக்குழு அஞ்சலி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் அரசியல் தலைமைக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.   முழு விபரம் : 5