states

உலகச் செய்திகள்

ரஷ்யாவுக்கு எதிரான அடுத்தகட்ட தடைகளை ஐரோப்பிய யூனியன் அறிவித்திருக்கிறது.இந்நிலையில், ஸ்விட்சர்லாந்து சில விதிவிலக்குகளை செயல்படுத்தப் போவதாகக் கூறியுள்ளது. சிரியாவில் சில மனிதாபிமான ரீதியான உதவிகளைச் செய்ய  வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு, ரஷ்யாவின் சில நிறு வனங்கள் செய்யும் குறிப்பிட்ட சேவைகளுக்கு விதிவிலக்குகள் அளிக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தோம் என்று அந்நாட்டின் மத்திய கவுன்சில் அறிவித்துள்ளது.

ஈரானின் சொத்துக்களை முடக்கிய அமெரிக்காவின் நடவடிக்கை, சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என்று சர்வதேச நீதிமன்றம் கூறியதோடு, ஈரானுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஈரான் மீது பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அந்நாட்டுக்குச் சொந்த மான 200 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்களை அமெரிக்கா பறிமுதல் செய்தது. இதற்கு எதிராக ஈரான் தொடுத்த வழக்கில்தான் இத்தகைய உத்தரவு வந்துள்ளது.

கட்சிக் கல்வியை முனைப்புடன் நடத்துவதற்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.   சீனத்தன்மையுடன் கூடிய புதிய சகாப்தத்திற்கான சோசலிசம் குறித்த ஜீ ஜின்பிங்கின்  சிந்தனைகள் பற்றிய வகுப்புகள் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் நடத்தப்படுகின்றன. ஏப்ரல் மாதத்தில் இந்த வகுப்புகள் தொடங்கும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.