states

மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்த கருத்தரங்கம்

சென்னை, மே 17- தமிழக அரசின் தொழில் முனை வோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறு வனம் மின்னணு  முறையில் சந்தைப் படுத்தல் குறித்த இணையவழி கருத்தரங்கம் வரும் 20ஆம் தேதி (காலை 10.30 மணி முதல் மாலை 5.30  மணி வரை) வழங்க உள்ளது. இப்பயிற்சியில் மின்னணு முறை யில் சந்தைப்படுத்தல் மின்னணு முறையின்  நுட்பங்கள், இணைய தளத்தை உருவாக்குதல், டொமைன்  பெயர் உருவாக்குதல் மற்றும்  ஹோஸ்டிங், இணையதள வடிவ மைப்பு நுட்பங்கள் மற்றும் விதிகள்,  மின்னணு முறையில் சந்தைப்படுத் தலின் நன்மைகள் விளக்கப்படும். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதில் பங் கேற்க முன்பதிவு அவசியம். மேலும்  விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல்  மாலை 5.45 மணி வரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்த சாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத் தாங்கல், சென்னை 32 என்ற முகவரியி லும், 7418304939. 9677152265, 8668102600 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.