கோயம்புத்தூர், டிச. 1 - மேற்கு மாவட்ட சிறு-குறு தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில் நெருக்கடிகள், மின் கட்டண உயர்வு, வங்கிக் கடன் பிரச்ச னைகளுக்குத் தீர்வுகாணும் நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறு ஒன்றிய - மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கோயம்புத்தூரில், நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக நிறை வேற்றப்பட்டுள்ள தீர்மானம் வருமாறு:
ஆயத்த ஆடைத்தொழில் மீது சிறப்புக் கவனம் வேண்டும்!
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்டவைகளில் கணிச மான சிறு- குறு தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக, துணி உற்பத்தி மற்றும் ஆயத்த ஆடை சார்ந்த தொழில்களும், வார்ப்படத் தொழில்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஒன்றிய அரசின் மோசமான கொள்கை களால் இந்தப் பகுதி கடுமையான நெருக்க டிக்கு ஆளாகியுள்ளது. ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இப்பகுதிக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நூல் இறக்குமதிக்கான அனுமதியை விலக்குக! உள்நாட்டு நூல் உற்பத்தியாளர்களை பாதிக்கும் விதத்தில் குறிப்பாக, பஞ்சு ஏற்று மதியின்போது உள்நாட்டுத் தேவையை கணக்கில் கொள்ளாமல் கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் லாபத்தை மட்டுமே முதன்மையாக கொள்ளும் பன்னாட்டு நூல் இறக்குமதிக்கு கொடுத்துள்ள அனுமதியை விலக்கிக் கொள்ள வேண்டும். கழிவுப் பஞ்சை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்திட வழிவகுக்க வேண்டும். மேலும், ஏற்றுமதித் தொழில்கள் மந்தமாகியிருப்பதால் டிராபேக் சதவிகிதத்தை உயர்த்திட வேண்டும். இப்பகுதியில் செயல்படும் தொழில்களுக்கு வங்கிக் கடன்களில் நிவாரண திட்டம் அறிவிக்க வேண்டும் என ஒன்றிய பாஜக அரசை மாநிலக்குழு வலி யுறுத்துகிறது. ஒன்றிய ஆட்சியின் போக்கிற்கு மாற்றாக ‘தமிழ்நாடு பருத்திக் கழகம்’ உருவாக்குவோம் என்ற முக்கியமான அறி விப்பை தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொண் டது. அதனை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்து நிவாரணமளிக்க வேண்டு மென கேட்டுக்கொள்கிறோம்.
மின்கட்டண உயர்விலிருந்து முற்றாக நிவாரணம் வேண்டும்
ஒன்றிய அரசின் நிர்ப்பந்தம் காரண மாக தமிழ்நாட்டில் சிறு-குறு தொழில் களுக்கு மின் கட்டணத்தில் செய்துள்ள மாற்ற ங்கள் கடும் பாதிப்பை உருவாக்கியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் எழுந்த விமர்சனங் களை தொடர்ந்து இந்த சுமை ஓரளவு குறைக்கப்பட்டிருந்தாலும், சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு நிலை கட்டணம், பீக் ஹவர் கட்டண உயர்வை ரத்து செய்திடுவதும், மேலும் சிறு- குறு தொழில்களை பாதுகாக்கும் வகையில் முற்றாக நிவாரணம் அளிப்பதுடன் சூரிய மின்சாரம் உள்ளிட்ட மாற்று முறைகளைக் கையாள அரசு மானியம் மற்றும் கடன் உதவிகள் வழங்கிட வேண்டுமெனவும் மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கோருகிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.