states

பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரள்வோம்! புதிய கூட்டணி எங்களின் நோக்கம் கிடையாது!

லக்னோ, மார்ச் 27- பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரளத் தயார் என்றும், மாநில கட்சிகளுக்கு காங்கி ரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சமாஜ்  வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறி யிருப்பதாவது:  பல்வேறு மாநிலக் கட்சிகள் அந்தந்த மாநி லங்களில் வலுவாக உள்ளன. பாஜகவுக்கு  எதிராக போராடி வரும் இந்த மாநில கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். பாஜக-வுக்கு எதி ரான மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு  அளிக்க வேண்டும். மாநிலக் கட்சிகளை முன்னிறுத்தி பாஜகவைத் தோற்கடிக்க காங்  கிரஸ் பக்க பலமாக இருக்க வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி மிக வும் வலுவாக இருக்கிறது. வரும் மக்கள வைத் தேர்தலில் பாஜகவை, நாங்கள் தோற்  கடிப்போம். உத்தரப்பிரதேசத்தில் பாஜக தோல்வியைத் தழுவினால் ஒட்டுமொத்த நாட்டிலும் அந்த கட்சி தோல்வியைத் தழுவு வது உறுதி. மக்களவைத் தேர்தலில் மாநில கட்சிகள் பங்களிப்பால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும். தேர்தலுக்குப் பிறகு  தேசிய அரசியலில் சமாஜ்வாதி பொறுப்பான கட்சியாக செயல்படும். இன்றைய சூழலில்  ராகுலுக்கு ஆதரவாக சமாஜ்வாதி செயல்படு கிறதா என்பது முக்கிய விஷயம் கிடையாது.  நாட்டின் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்  டும். இதுதான் முக்கியம்.  மாநில கட்சிகளால் தேசிய கட்சிகளுக்கு  எவ்வித பாதிப்பும் கிடையாது. மத்தியில் ஆளும் பாஜக அரசால்தான் அனைத்துக் கட்சிகளும் பாதிக்கப்படுகின்றன. எதிர்க் கட்சிகளுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை ஏவி விடப்படுகிறது. தேசிய அளவில் புதிய கூட்டணியை உருவாக்குவது எங்கள் பணி கிடையாது. ஒத்த கருத்துடைய கட்சி களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு வரு கிறோம். இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரி வித்துள்ளார்.