மகளிர்க்கான இடஒதுக்கீடு 2029-இல் நடைமுறைக்கு வரும் என ஊடக அறிக்கைகள் கூறு கின்றன. இது தவறானது. உண்மை யில் 2039 வரை மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வராது. பெரும்பாலான ஊடக அறிக்கை கள், தொகுதி மறுவரையறை விதியை கவனத்தில் கொள்வதாக இல்லை. பிரிவு 82 (2001-இல் திருத்தப் பட்டது) 2026-க்குப் பின்பு நடை பெறும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவ ரங்களுக்கு, முன்னதாக தொகுதி மறு வரையறை செய்வதைத் தடை செய்கின்றன. எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2031-இல் மட்டுமே இருக்க முடியும். இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், தொகுதி மறுவரையறை ஆணையம் அதன் இறுதி அறிக்கையை வழங்க 3 முதல் 4 ஆண்டுகள் (கடைசியாக ஒரு அறிக்கை 5 ஆண்டுகளுக்குப் பின் வெளியானது) ஆகும் என்பது பெரும்பாலான பார்வையாளர் களுக்கு நினைவில் இல்லை. அதுமட்டுமன்றி, வரவிருக்கும் தொகுதி மறுவரையறை, மக்கள் தொகை விகிதாச்சார மாற்றங் களைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் என்பதால், அது மிகவும் சர்ச்சைக்குரியதாக இருக்க லாம். எனவே, 2037- அல்லது அதற்குப் பின்னர்தான் தொகுதி மறு வரையறை அறிக்கை வெளியாகும் என கருதுகிறேன். எனவே, அதன் பிறகு மகளிர் இடஒதுக்கீடு 2039-இல் மட்டுமே செயல்படுத்தப்படும்.