சென்னை, செப்.14- பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. இதற்காக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் தொழில் செய்யும், வியா பாரிகள், கூலி தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் சொந்த ஊர்க ளுக்கு செல்ல இப்போதே முன்பதிவு செய்ய தொடங்கி விட்டனர். பொங்கலையொட்டி வெளியூர் பயணத்தின் காலை 8 மணிக்கு முன்பதிவுக்கான நேரடி புக்கிங் கவுண்டர் திறக்கப்பட்டது. ஆனால் கவுண்டர்களில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை. அனைவரும் வீடுகளில் இருந்தே ஆன்லைன் வழியாக முன் பதிவு செய்தனர். ஐஆர்சிடிசி இணையதளம் திறக் கப்பட்டதும் முன்பதிவு செய்தனர். சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அம்பத்தூர், அடையார், பெரம்பூர், மாம்பலம் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் முன்பதிவு கவுண்டர்களில் நின்ற பயணிகள் சிலருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைத்தது. முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களில் முக்கிய ரயில்க ளுக்கான இடங்கள் நிரம்பி விட்டன. 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பி காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தன. இணையதளம் வழியாக பொதுமக்கள், ரயில்வே முகவர்கள் முன்பதிவு செய்வதில் தீவிரமாக இருந்தனர். முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நிமிடங்களில் அனைத்து இடங்களும் நிரம்பியது.