states

திருச்சிராப்பள்ளியில் காவல்துறை துப்பாக்கிச் சூடு

திருச்சிராப்பள்ளி, பிப்.20- திருச்சிராப்பள்ளி குழுமாயி அம்மன் கோவில் பகுதியில் திங்களன்று காவல் துறையினர் இருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதுகுறித்து காவல்துறை தரப்  பில் கூறப்படுவதாவது: திருச்சிராப்பள்ளி புத்தூர் வண்ணா ரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் துரைசாமி, சோமசுந்தரம் (எ) சாமி. இரு வரும் சகோதரர்கள். இதில் துரைசாமி என்ப வர் மீது கஞ்சா கடத்தல், கொள்ளை, ஆள்  கடத்தல் மற்றும் ஐந்து கொலை வழக்கு கள் என 69 வழக்குகள் உள்ளன. திருச்சி ராப்பள்ளி மாவட்டத்தில் 30 வழக்குகள், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், நாமக்கல் மாவட்டங்களில் எஞ்சிய வழக்கு கள் உள்ளன.  இந்த நிலையில் துரைசாமியும், சோம சுந்தரமும் நகை திருட்டு தொடர்பான வழக்கில் நகைகளை குழுமாயி அம்மன்  கோவில் பகுதியில் மறைத்து வைத்திருப்ப தாக காவல்துறை விசாரணையில் தெரி வித்திருந்தனர். அதனடிப்படையில் அந்த நகைகளை மீட்க காவல்துறையினர் அவர்  கள் இருவரையும் குழுமாயி அம்மன் கோவில் பகுதிக்கு அழைத்து வந்துள்ள னர். அப்பொழுது இருவரும் காவல்துறை யினரை தள்ளிவிட்டு ஜீப்பிலிருந்து தப்பித்  துள்ளனர். இருவரையும் காவல்துறை யினர் விரட்டிப் பிடிக்கும் போது  அவர்கள்  அந்தப் பகுதியில் மறைத்து வைத்திருந்த  கத்தியால் காவல்துறை ஆய்வாளர் மோகன் மற்றும் இரண்டு காவலர்களை  வெட்டியுள்ளனர். இதையடுத்து அவர்களிட மிருந்து தங்களைக் தற்காத்துக் கொள்ள வும், அவர்களைப் பிடிக்கவும் காலில் சுட்டுப் பிடித்தனர்.   தகவலறிந்து வந்த திருச்சிராப்பள்ளி மாநகர் காவல்துறையினர்  சம்பவ இடத்  திற்கு வந்து குற்றவாளிகளையும் காவல் துறையினரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர் என விளக்கமளித்துள்ளது.