சென்னை, மே 28 - சென்னையில் பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு பிறகு, பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை விமர்சித்து பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்த அண்ணா மலை, “பிரதமரை மேடையில் அமர வைத்து, தமிழ்நாடு முதல்வர் அரசி யல் செய்துள்ளார். இது நாகரிகம் அற்ற செயல். தமிழக முதல்வரின் மோச மான நடத்தையால் நான் வெட்கப்படு கிறேன். முதல்வரும் நானும் கொள்கை யில் 360 டிகிரி மாறுபட்டவர்கள். 360 டிகிரி நாங்கள் திமுகவுக்கு எதிரிதான். ஆனால் அதற்காக முதல்வருக்கு உண்டான மரியாதையை கொடுக்கா மல் இருக்க மாட்டோம்” என்று கொதித்துத் தள்ளினார். முதல்வர் மீதான அண்ணா மலையின் விமர்சனம் ஒருபுறமிருக்க, அண்ணாமலை கூறிய 360 டிகிரி கோணம்தான் தற்போது சமூகவலை தளங்களில் தீவிரமான விவாதமாக மாறியிருக்கிறது.
நேரெதிரானது என்பது 180 டிகிரி தான். 360 டிகிரி என்பது எதிர் எதிர் துருவம் கிடையாது. அது ஒரே புள்ளி யையே குறிக்கும். அதாவது ‘ஏ’ என்ற புள்ளிக்கு 360 டிகிரி கோணம் என்பது அதே ‘ஏ’ என்ற புள்ளிதான். அண்ணா மலை உணர்ச்சிவசப்பட்டு 180 டிகிரியை, அவர் இஷ்டத்திற்கு 360 டிகிரி யாக்கி விட்டார். நான் முதல்வருக்கு எதிராக இருக்கிறேன் என்பதற்குப் பதில், நான் முதல்வரோடுதான் இருக்கி றேன் என்று கூறியிருக்கிறார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை க்கு இந்த சின்ன ஜியோமெட்ரி கணக்கு கூடவா தெரியவில்லை.. என்று பலரும் கடுமையாக கிண்டலடித்து வரு கின்றனர். தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஒருபடி மேலே சென்று தனது டுவிட்டர் பக்கத்தில் 60 டிகிரி முதல் ஆரம் பித்து 360 டிகிரி வரை எப்படி இருக்கும் என்று படம் போட்டு, அண்ணாமலை க்கு கணக்குப் பாடமே எடுத்து விட்டார். மேலும், “இது மிகவும் பேசிக் விஷயம் என்பதால் அதை யுபிஎஸ்சி தேர்வில் சேர்க்கவில்லை போல” என்று பழனிவேல் தியாகராஜன் செய் துள்ளார். அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் யுபிஎஸ்சி தேர்வை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளார். தற்போது அண்ணாமலையின் ஜியோமெட்ரி ‘அறிவு’தான் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் என அனைத்து சமூக ஊடகங்களிலும் ஒரே பேச்சா கவும், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் தீனியாகவும் மாறியிருக்கிறது.