states

img

பசுவை புனித மாதாவாக அறிவிக்கும் ம.பி. அரசு.. பெண்கள், குழந்தைகள் பிரச்சனை தீர்ந்து விடுமாம்...

போபால்:
பெண்கள், குழந்தைகள் எதிர்கொள்ளும்  பிரச்சனைகளுக்கு தீர்வுஏற்பட வேண்டுமானால், அதற்கு பசுவை புனித மாதாவாக அறிவிப்பது தான் வழி என்று மத்தியப் பிரதேச அமைச்சரவை கண்டறிந்துள்ளது.மத்தியப்பிரதேச அமைச்சரவைச் கூட்டம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் காணொலி முறையில் நடைபெற்றது. பசுமாடு தொடர்புடைய இந்த அமைச்சரவைக் கூட்டத்தில்தான், பசுவை புனிதமாதா-வாக அறிவிக்கும் முடிவு எடுக்கப் பட்டுள்ளது. 

மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, வனத்துறை அமைச்சர் விஜய் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்ட அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.அதில், “சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பசுவை பாதுகாப்பது அவசியம். ஊட்டச்சத்துக் குறைவுள்ள குழந்தைகளின் உடல்நலன் மேம்பட பசும்பால் பயன்படும். மரம் மற்றும்ரசாயன உரத்திற்கு மாற்றாக பசுஞ்சாணம் பயன்படும். இவை சுற்றுச்சூழலை காக்கும். அதனுடன், பசுவின் கோமியம் பூச்சிக் கொல்லியாகவும் மற்றும் மருந்துப் பொருளாகவும் பயன்படும். எனவே, பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்க்க பசுவை ‘புனித மாதா’ என அறிவிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

                   *********************

‘கோமாதா வரி’ விதிக்கவும் முடிவு
பசுவைப் புனித மாதாவாக அறிவிக்க இருப்பதாக கூறியுள்ள ம.பி. பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இதற்காக மக்களிடம் ‘கோமாதா வரி’ என்ற புதிய வரி விதிக்க உள்ளதாகவும் கூறி பயமுறுத்தியுள்ளார்.“பசுக்கள் நலனுக்காகவும், மாட்டுக் கொட்டகைகளின் பராமரிப்புக்காகவும் பணம் திரட்டுவதற்கு சில சிறிய வரி விதிக்க நான் யோசிக்கிறேன். நம் இந்திய கலாச்சாரத்தில் விலங்குகளுக்கான அக்கறை இப்போது மறைந்து வருகிறது. எனவே மாடுகளுக்காக பொது மக்களிடம் இருந்து கோமாதா வரியைவசூலிப்பது பற்றி யோசித்து வரு கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

;