states

உண்மையைக் கண்டு அஞ்சும் மோடி அரசு! - சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

“ஒன்றிய அரசு மாநிலங்களினுடைய உரிமை யை பறிப்பதற்கும் மாநிலங்களில் வெறுப்பு அரசியலை ஊட்டி வளர்ப்பதிலும் தங்களுடைய அதி காரத்தை நிலை நிறுத்துவது என்ற இரண்டு வழிமுறை களை செயல்படுத்தி வருகிறது. தங்களுடைய அதிகார பசிக்காக எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் உரிமையை பறிப்பது தங்களுடைய அதிகாரத்தை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ள மாநிலங்களின் ஒற்றுமையைக் குலைக்கின்ற வெறுப்பு அரசியலை தொடர்ந்து நடத்தி வருவது. இதுதான் ஒன்றிய அர சின் இரண்டு வழிமுறைகளாக உள்ளது. இந்த இரண்டுக்கும் சிறந்த உதாரணமாக ஒரு பக்கம் மணிப்பூர், இன்னொரு பக்கம் தமிழ்நாடாக இருக்கி றது.  மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கும் விஷயங்கள் இன்றைக்கு அனைவருக்கும் தெரியும், வெறுப்பை தூவி விட்டு 78 நாட்களாக இன்றைக்கு மணிப்பூர் பற்றி  எரிந்து கொண்டிருக்கின்றது. பிரதமர் வாயே திறக்கா மல் இருக்கின்றார். உலகில் உள்ள அனைத்து ஊட கங்களும் பிரதமரை எப்படி சித்தரித்துக் கொண்டிருக் கின்றன என்பது அனைவருக்கும் தெரியும். நாடாளு மன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கி இரண்டு நாட்கள் ஆகின்றது.  

மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஆனால் அரசு விவாதிக்க மறுக்கின்றது. நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு அதிக பெரும்பான்மை உள்ளது. நாடாளுமன்றத்தில் என்ன விவாதம் வரப்போகிறதோ அதற்கான தொகுப்புரையினை கடைசியில் அவர்கள் தான் கூறப் போகிறார்கள். ஆனாலும் மணிப்பூர் கலவரத்தை பற்றி விவாதிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை. கார ணம் உண்மையைக் கண்டு அஞ்சுகின்றது, விவா தத்தை எதிர்கொள்ள முடியாத அரசாக மோடி அரசு உள்ளது.  மணிப்பூர் பிரச்சனை குறித்து எதிர்க்கட்சிகள் என்ன சொல்ல நினைக்கின்றனவோ அதை எதிர் கொள்ள முடியாததால் தான் அவர்கள் விவாதத்தை தவிர்க்கிறார்கள். 8000 துப்பாக்கிகளுக்கு லைசன்ஸ் கொடுத்த பாஜக மாநில அரசு 1500 துப்பாக்கிகளை காணவில்லை என்று சொல்கிறது. இதைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கின்றார்.  கொழுந்து விட்டு எரியும் இந்த மணிப்பூர் கலவர அரசியலுக்கு முழுக்க காரணம் மாநில அரசின் முதல்வர் தான். அவர் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இல்லாத பிரதமராகத்தான் மோடி அவர்கள் உள்ளார்கள். எனவேதான் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கும் தயாராக இல்லை.”