states

தீக்கதிர் விரைவு செய்திகள்

சர் சி.பி. ராமசாமியை புனிதராக்க பாஜக முயற்சி  அமைச்சர் வி.சிவன்குட்டி குற்றச்சாட்டு

திருவனந்தபுரம், நவ.13- பாகிஸ்தான் ஆதர வுடன் இந்தியாவின் ஒருமைப் பாட்டுக்கு எதிராக செயல்பட்ட சர்.சி.பி.ராம சாமி ஐயரை புனிதராக்க பாஜக தேசிய தலைவர் பிர காஷ் ஜவடேகர் முயற்சிப்ப தாக அமைச்சர் வி.சிவன் குட்டி கூறினார். சி.பி. ராமசாமி ஐயர் ஒரு சிறந்த நிர்வாகி என்று பாஜக தலைவர் கூறுகிறார். இந்தியா சுதந்திரம் பெறும் கட்டம் வந்தபோது, திருவிதாங்கூரை இந்தியா வுடனோ பாகிஸ்தானோடோ சேராமல் சுதந்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான் சி.பி. ராம சாமி ஐயரின் முயற்சி. சி.பி.  ராமசாமி ஐயரின் நட வடிக்கைகளுக்கு பாகிஸ்தா னின் ஆதரவு இருந்ததாக வும் அமைச்சர் சிவன்குட்டி கூறினார்.

நான்கு நாட்களுக்கு லேசான மழை 

சென்னை, நவ.13-  தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. கேரளா மற்றும் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஞாயிறன்று (நவ.13) தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதி களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. கன்னி யாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்துள்ளது.  திங்களன்று (நவ.14) முதல் வியாழக் கிழமை (நவ.17)  வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்க ளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப் படும் என்றும், நகரின் ஒருசில பகுதி களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான பெய்யக்கூடும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. 

முருகன், சாந்தன்  திருச்சி முகாமிற்கு மாற்றம்

சென்னை, நவ.13- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து உச்சநீதி மன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், முருகன், சாந்தன், ெஜயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் சென்னை புழல்  சிறையில் இருந்துவிடுதலை செய்யப் பட்டனர். எனினும் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமுக்கு சனிக்கிழமை  நள்ளிரவு அழைத்து வரப்பட்டனர். அவர்க ளின் வருகையை சிறப்பு முகாமின் பொறுப்பு அதிகாரி உதவி ஆட்சியர் வேலு மணி முறைப்படி பதிவு செய்தார். பின்னர் அவர்கள் அங்குள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் 4 பேரும் அழைத்து வரப்பட்டதையொட்டி, திருச்சி  மத்திய சிறை வளாகத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.