மாணவர் அரசியலுக்கு தடை இல்லை கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
கல்லூரிகளில் மாணவர் அரசிய லுக்கு தடை விதிக்க தேவை யில்லை என கேரள உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. மதத்தின் பெயரால் செய்யப்படும் செயல்களுக்கு மதத்தை தடை செய்ய முடியாது. அதுபோல் மாணவர் அரசிய லில் உள்ள மோசமான போக்குகள் களை யப்பட வேண்டும். கல்லூரியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் காவல்துறை தலையிடலாம். இதில் கல்வி நிறுவன முதல்வரின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் உயர்நீதிமன்ற அமர்வு கூறியது. கடந்த ஜனவரி மாதம் மகாராஜா கல்லூரியில் நடந்த மோதல் சம்பவத்தை அடுத்து கல்லூரி வளாக அரசியலுக்கு தடை கோரிய பொதுநல மனுக்களை நீதிபதிகள் முஹம்மது முஷ்டாக், பி. கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனு ஜனவரி 23ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
நாட்டில் 80 கோடி பேர் வறுமையில் உள்ளார்கள் மீண்டும் மேடைக்கு வந்த “70 மணி நேர” நாராயணமூர்த்தி
இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி கடந்த சில மாதங்களாக, “நம் நாட்டு இளைஞர்கள் வாரத்தி ற்கு 70 மணி நேரம் வேலை செய்யத் தயா ராக இருக்க வேண்டும்” என்று அடிக்கடி கூறி வருகிறார். இவரது பேச்சிற்கு நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தனது 70 மணி நேரம் வேலை கருத்தில் இருந்து நாராய ணமூர்த்தி பின் வாங்காமல், மாறாக தனது கருத்தை நியாயப்படுத்தும் விதமாக அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக மேற்கு வங்க மாநி லம் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய வர்த்தக சபையின் நூற்றாண்டு விழாவில் நாராயணமூர்த்தி பேசுகையில், “இந்தியாவை நம்பர் 1 ஆக உருவாக்குவ தற்காக கடினமாக உழைக்க வேண்டும் (70 மணி நேரம் வேலையை மறைமுக மாக) என்பதை இளைஞர்கள் உணர வேண்டும். உலகின் தலைசிறந்த நிறுவ னங்களுடன் நம்மை ஒப்பிடும் போது இந்தியர்களாகிய நாம் நிறைய பணி யாற்ற வேண்டும். நமது இலக்கை மிக உயர்வாக வைக்க வேண்டும். ஏனெனில் 800 மில்லியன் மக்கள் இலவசமாக ரேஷன் பெறுகிறார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால் 80 கோடி பேர் வறுமை யில் உள்ளார்கள். நாம் கடினமாக உழை க்க தயாராகவில்லை என்றால், பிறகு யார் செய்வார்கள்” எனக் கூறி, தனது 70 மணி நேரம் வேலை கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளார்.
காலை உணவுதிட்டத்தால் 21 லட்சம் குழந்தைகள் பயன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, டிச.16- சென்னை சைதாப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரை யாற்றிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டத்தின் மூலம் 21 லட்சம் குழந்தை கள் பயன்பெறுகின்றனர். மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங் களில் இந்த திட்டத்தை பின்பற்று கிறார்கள். மகளிர் உரிமை திட்டத்தை பற்றி ஆரம்பத்தில் பல பேர் ஏளன மாக பேசினார்கள். ஆனால் தற்போது ஒரு கோடி 15 லட்சத்துக்கு மேற்பட்ட மக ளிர், அத்திட்டத்தின் வழி பயன்பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார். விடியல் பயணம் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் 57 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு தமிழ்ப்புதல்வன் திட்டத்திற்கு ரூ. 300 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆன்லைன் மோசடி விழிப்புணர்வு கருத்தரங்கம்
கரூர், டிச.16 - ஆன்லைன் மூலம் வங்கி கணக்கு களில் மோசடி, பெண்களுக்கு எதிராக செல்போன் மூலம் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், எச்சரிக்கையாக இருப்பது குறித்தும் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கரூர் ஒன்றியக் குழு சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. புகளூர் சமுதாய கூடத்தில் நடந்த கருத்த ரங்கத்திற்கு புகளூர் நகர்மன்ற உறுப்பினர் அ.இந்துமதி தலைமை வகித்தார். மாதர் சங்க கரூர் மாவட்டச் செயலாளர் இ.சுமதி வர வேற்றார். சிஐடியு கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் துவக்கி வைத்துப் பேசினார். கரூர் சைபர் கிரைம் காவல்துறை ஆய்வாளர் இசைவாணி, உதவி ஆய்வாளர் சுதர்சனன், வேலாயுதம்பாளையம் ஸ்டேட் பேங்க் மேலாளர் சந்தோஷ், உதவி மேலாளர் தினேஷ், வேலாயுதம் பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுபாஷினி ஆகி யோர் விழிப்புணர்வு குறித்து பேசினர். கூட்டத்தில் புகலூர் நகர்மன்ற துணைத் தலைவர் பிரதாபன், வார்டு கவுன்சிலர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றியச் செயலாளர் பூரணம், மாவட்டக் குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்
சென்னை, டிச.16- அதிமுக பொதுச்செயாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டம் தெரிவித்துள்ளார். அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் வலைத் தளத்தில், தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சமத்துவ-சமூக மேம்பாட்டு செயல்திட்டங்கள் தமிழ்நாடு மக்கள் முதல்வருக்கான சிம்மாசனத்தை அளித்திருக்கிறார்கள். குரலை உயர்த்தி கைகளைச் சுழற்றி பேசினால் மக்களை ஏய்த்து, திமுகவை வீழ்த்தி விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார் பழனிசாமி! ஆட்சிக்காகவும் அதிகாரத்திற்காகவும் சசிகலா தொடங்கி, ஓபிஎஸ் வரை ஒவ்வொருவராக காலை வாரிவிட்ட நீண்ட துரோக வரலாறு உங்களுடையது! ஆட்சிக்காக பாஜகவிடம் அண்டிப் பிழைத்து மாநிலத்தின் உரிமைகளை எல்லாம் அடகு வைத்துவிட்டு இப்பொழுதும் கூட பாஜகவை எதற்குமே கண்டிக்காமல் ‘வலிக்காமல் வலியுறுத்திவிட்டு’ மேடையில் வாய்ச்சவடால் விட்டுக் கொண்டி ருக்கும் கோட்டைச்சாமியை யாராவது எழுப்பிவிடுங்கள்” என பதிவிட்டுள்ளார்.
5 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
சென்னை,டிச.16- தமிழ்நாட்டில் அமுதா, அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காகர்லா உஷா, அபூர்வா ஆகிய 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செய லாளர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வருவாய்த் துறை முதன்மைச் செயலாளராக உள்ள அமுதா வுக்கு கூடுதல் தலைமைச்செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள் ளது. அதுபோல் அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காகர்லா உஷா அபூர்வா ஆகியோருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு நிதி ரூ.68,900 திருப்பூர் மாவட்டக் குழு உறுப்பினர்கள் வழங்கினர்
திருப்பூர், டிச.16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கு திருப்பூர் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ரூ.68 ஆயிரத்து 900 நிதி வழங்கினர். திருப்பூர் தியாகி பழனிசாமி நிலையத்தில் திங்க ளன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு கூட்டம், மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் தலை மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் உள்ளிட்ட மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், மதுரையில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24 ஆவது மாநாடு மற்றும் விழுப்புரத்தில் நடைபெற உள்ள 24 ஆவது மாநில மாநாட்டுக்கான பணிகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, டிசம்பர் 22 ஆம் தேதி மாநில மாநாட்டு தீக்கதிர் சிறப்பிதழ் 5,050 பிரதிகள் வாங்கி பொது மக்களிடம் கொண்டு செல்வது என்று முடிவு செய்யப் பட்டது. அத்துடன் மாநாடு குறித்து திருப்பூர் மாவட்டத் தில் பரவலாக சுவர் விளம்பரங்கள் செய்வது, வெண்மணி தியாகிகள் நினைவு தினமான டிசம்பர் 25 ஆம் தேதி மாவட்டத்தின் முக்கிய நகரங்கள், கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 24 ஆவது மாநாட்டைக் குறிக்கும் விதத்தில் 24 செங்கொடிகளுடன் அலங்கார வளைவு அமைத்து பிரச்சாரம் செய்வது என்றும் தீர்மா னிக்கப்பட்டது. அகில இந்திய மாநாட்டுப் பேரணியில், மாவட்டத் தில் அனைத்துக் கிளைகளிலும் கட்சி உறுப்பினர்கள் குடும்பம், குடும்பமாக முழுமையாகப் பங்கேற்பது, அகில இந்திய மாநாட்டுக்கான நிதி இலக்கை நிறைவு செய்வது, இந்த மாவட்டத்தில் ஒவ்வொரு கட்சி உறுப்பி னரும் தங்கள் குறைந்தபட்ச பங்களிப்புத் தொகை யாக ஒரு நாள் ஊதியத்தை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இத்துடன் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கள் தங்கள் பங்களிப்பு தொகையாக ரூபாய் 68 ஆயி ரத்து 900-ஐ இந்தக் கூட்டத்தில் வழங்கினர். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தை டிசம்பர் 25 அன்று உடன் நிறைவு செய்து ஒப்படைப்பது என்றும் தீர்மானிக்கப் பட்டது.