states

img

போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதம் நிறைவு

சென்னை, ஜூன் 25 - போக்குவரத்துக்  கழகத்தை பாதுகாக்க வேலைநிறுத்தத்தை நோக்கி செல்வோம் என்று தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செய லாளர் கே.ஆறுமுகநயினார் கூறினார். கழகங்களின் வரவுக்கும், செலவுக்கு மான வித்தியாசத் தொகையை பட் ஜெட்டில் ஒதுக்கித் தர வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி போக்கு வரத்து ஊழியர்கள் நடத்திய 24 மணி நேர உண்ணாநிலைப் போராட்டம் செவ்வா யன்று (ஜூலை 25) நிறைவடைந்தது. மாநிலம் முழுவதும் 100 மையங்களில் நடைபெற்ற இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை வடபழனி பணிமனை யில்  நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்தை கே.ஆறுமுகநயினார் நிறைவு செய்து பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: போக்குவரத்துக் கழகத்தைப் பாது காக்க வேண்டும், பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பிரச்சனை களுக்கு தீர்வு காண வேண்டும், ஒப்பந்த  முறையில் தொழிலாளர்களை நியமிக்கா மல், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி 100 மையங்களில் 5ஆயி ரம் தொழிலாளர்கள் பங்கேற்ற உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய சேவை நிறுவனமான போக்குவரத்துக் கழ கத்திற்கு அரசு முறையாக நிதி ஒதுக்கு வதில்லை. 50 விழுக்காடு பேருந்துகள் காலாவதியாகி ஓட்ட தகுதியற்றதாக உள்ளன. தொழிலாளர்களின் பணம் ரூ.15 ஆயிரம் கோடியை எடுத்து நிர்வாகம் செல வழித்து விட்டது. இதனால் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு 18 மாதங்களாக ஓய்வுக்கால பணப்பயன்களை வழங்கா மல் உள்ளனர். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 104 மாதங் களாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப் பட்டு வருகிறது. காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யாததால் பேருந்துகளை முழு மையாக இயக்க முடியவில்லை. இவற்றை  சரிசெய்யாமல், காண்ட்ராக்ட் முறையில் ஊழியர்களை எடுக்கின்றனர். இந்த முறையில் இட ஒதுக்கீடு இருக்காது.  மினி பேருந்துகளை தனியாருக்கு கொடுப்பதாக அறிவிப்பு செய்துள்ளனர். ஆங்கிலேயர் காலத்திலிருந்தே சென்னை வழித்தடங்கள் அரசு வசம் இருப்பவை. மினி பேருந்துகளை அரசேதான் இயக்க வேண்டும். லாபத்திற்குத்தான் தனியார் பேருந்துகளை இயக்குவார்கள். தினசரி 2 கோடி பேர் பயணம் செய்யும் போக்கு வரத்து துறையை அரசு பாதுகாக்க வேண்டும். ஊழியர்களின் ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே தொடங்க வேண்டும். இந்த கோரிக்கைகளுக்காக பிற சங்கங்களோடு கலந்து பேசி அடுத்து  வலுவான போராட்டங்களை முன்னெடுப் போம். வேலைநிறுத்தத்தை நோக்கியும் செல்வோம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின்போது அரசாங்க போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரை, துணைப் பொதுச் செயலாளர் சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.