ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து தென்கிழக்கே 107 கிமீ தொலைவில், 65 கி.மீ., ஆழத்தில் 6.1 ரிக்டர் அள வில் நிலநடுக்கம் ஏற் பட்டது. இந்த நிலநடுக்க த்தால் பெரியளவு சேதம் ஏற்படவில்லை, சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
ஈரான் நாட்டில் மேலும் ஒருவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற ப்பட்டது. விபச்சாரம் மற்றும் பெண்கள், சிறுமி களை ஏமாற்றி படம் எடுத்ததாக கடந்த 1995-இல் கைது செய்யப் பட்டு மரகே சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர், 28 ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிலிடப் பட்டுள்ளார். கடந்த வாரம் இறைநம்பிக்கை அவமதிப்பு தொடர்பாக 2 பேரை தூக்கிலிட்டது ஈரான் அரசு.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தலோஜாவில் உள்ள வேஸ்ட் மேனே ஜ்மென்ட் லிமிடெட் நிறுவனத்தில் சுமார் ரூ.1,500 கோடி மதிப் புள்ள 350 கிலோ போதைப் பொருட்களை சுங்கத்துறையினர் அழித்தனர்.
இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், கனடா, பிரேசில், மொரிஷியஸ், மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடு களில் ஐஒஎஸ் (iOS-iPhone operating system) பயனர்களுக் காக சாட்ஜிபிடி செயலி யை அறிமுகம் செய்யப் பட்டுள்ளதாக ஓபன்ஏஐ நிறுவனம் அறிவித்துள் ளது. மேலும் சாட்ஜிபிடி செயலியின் ஆண்ட்ரா ய்டு பதிப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் ஓபன் ஏஐ தகவல் தெரிவித்துள் ளது.
விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தனர். இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் கடந்த 7 நாட்கள் நடந்த போதைப் பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனையில் 23 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு 41 பேர் கைது செய்யப்பட்டனர்.
“காவேரி கூக்குரல் இயக்கம்” சார்பில் வரும் மே 28 அன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பலாப் பழ திருவிழா நடைபெறவுள்ளது.
விடுமுறை சீசன் என்ப தால் திருப்பத்தியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், பக்தர்கள் 36 மணி நேரம் வரைகாத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
பழனி முருகன் கோயி லில் விஐபி தரிசனம் செய் வதற்கு மாலை 3 மணி முதல் 4 மணி வரை நேரம் ஒதுக்கவும், அந்த சமயத் தில் மற்ற பக்தர்களின் தரிசனத்தை நிறுத்தி வைக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. இது தொடர்பாக பக்தர்கள், பொதுமக்கள் ஆட்சேப னை இருந்தால் தெரி விக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகச் செய்திகள்
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் ஜூன் 1 ஆம் தேதியன்று நடைபெறுகிறது. பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் தற்போது தென் ஆப்பிரிக்கா உள்ளது. அதையொட்டி தென் ஆப்பிரிக்காவில் இருநூறுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.
கொரியப் பகுதியில் மீண்டும், மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் போர்ப்பயிற்சிகளை அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து நடத்தி வருகின்றன. தற்போது மூன்று வார காலம் நடைபெறவிருக்கும் பயிற்சி, இந்தப் பகுதியில் இதுவரை நடத்தப்பட்ட பயிற்சிகளை விட மிகப் பெரிய அளவில் இருக்கப் போகிறது. போர் விமானங்கள், ராக்கெட்டுகள், பீரங்கிகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை இந்தப் பயிற்சியில் பயன்படுத்தவிருக்கிறார்கள்.
காலநிலை மாற்ற அபாயங்களைக் கட்டுப்படுத்தத் தவறும் ஆட்சியாளர்களுக்கு எதிராக பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பேரணியைக் கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகளை காவல்துறையினர் பயன்படுத்தியுள்ளார்கள். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பெரு நிறுவனங்களின் பொதுக்குழுக் கூட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்ற முடிவின் அடிப்படையில் லண்டன், பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் பேரணிகள் நடைபெற்றுள்ளன.