- இந்தியப் பெருங்கடலில் நடைபெறும் போர்ப் பயிற்சியில் ஈரான் கப்பற்படை பங்கேற்கும் என்று அந்நாட்டு ராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் முகமது உசேன் பகேரி தெரிவித்துள்ளார். இதில் ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றின் கப்பற்படைகளும் பங்கேற்க உள்ளன. 2019-ஆம் ஆண்டிலி ருந்து இந்தப் போர்ப் பயிற்சி கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நான்காவது முறையாக இது நடக்க விருக்கிறது. வேறு சில நாடுகளும் பங்கேற்க வாய்ப்பு உள்ளது என்றும் பகேரி கூறியுள்ளார்.
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்புக் கோரத் தயாராக இருப்பதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். கடந்த மாதத்தில் கட்சிக் கூட்டமொன்றில் பேசிய அவர், ஒரு பெண் நீதிபதி பற்றித் தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரணையின்போது, நீதிமன்றம் வந்த இம்ரான்கான் தான் மன்னிப்புக் கேட்கத் தயார் என்று குறிப்பிட்டார். அவர் இவ்வாறு தெரிவித்ததால் வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
- ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்கோ அபேவுக்கு பெரும் பொருட்செலவில் இறுதி மரியாதை செலுத்தப்படுவதற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தலைநகர் டோக்கியோவின் யோயோகி பூங்காவில் நடந்த எதிர்ப்புக் கூட்டத்தில் 13 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த விவகாரத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் அரசு மரியாதையுடனான இறுதிச் சடங்கு வேண்டாம் என்று கருத்து தெரிவித்திருந்தனர். ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியும் இதை எதிர்த்துள்ளது.