புதுதில்லி, ஜூலை 31- ஒன்றிய மோடி அரசு இறந்தவர்களை தகனம் செய்வதற்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது ஜிஎஸ்டி சட்டம்-2017- அட்டவணை 3-இல் மொத்தம் எட்டு விஷயங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. அதில் வரிசை எண்-4-இல் இறந்தவர்களை அடக்கம் செய்வது, தகனம் செய்வது ஆகியவை சேவைகள் வழங்கல் எனக் கருதப்படாது எனக் கூறியுள்ளது. வரியையும் விதித்து விட்டு, இது ‘‘தகனம்செய் யும் பணி ஒப்பந்தங்கள்’’ என்று அரசு புதிய வியாக்கி யானம் ஒன்றைக் கூறி யுள்ளது.